மும்பையில் 4வது மாடியிலிருந்து விழுந்த 1 வயது குழந்தை உயிர் பிழைத்தானா...?

அதர்வா, தனது வீட்டிற்குள் விளையாடியபோது, ஜன்னல் வழியாக தவறி விழுந்துள்ளான்

மும்பையில் 4வது மாடியிலிருந்து விழுந்த 1 வயது குழந்தை உயிர் பிழைத்தானா...?

மும்பையின் கோவாண்டி புறநகர்ப் பகுதியில், அதர்வாவின் குடும்பம் வசித்து வருகின்றது. 

Mumbai:

மும்பையில், 4வது மாடியிலிருந்து தவறி விழுந்த 14 மாத குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. தற்போது அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. 

அதர்வா பார்கடே என்கின்ற அந்தக் குழந்தை, தனது வீடிருக்கும் 4வது மாடியிலிருந்த தவறி விழுந்துள்ளது. அப்போது இல்லத்துக்கு அருகிலிருந்த மரக் கிளையில் அதர்வா சிக்கியுள்ளான். அதனால், நேரடியாக தரையில் விழுவதற்கு முன்னர் மேலே இருந்து கீழே விழுந்ததின் தாக்கம் குறைந்துள்ளது. அதர்வாவுக்கு உதடு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

p72hdnso

மும்பையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அதர்வாவுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தரப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதர்வா, தற்போது ஐசியூ பிரிவில் வைத்து பார்க்கப்பட்டு வருகிறார். அவரின் நிலை அட்மிட் செய்த நேரத்தைவிட தற்போது நன்றாக தேறியுள்ளது. அதே நேரத்தில் கல்லீரல் பகுதியில் அதர்வாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது' என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதர்வா, தனது வீட்டிற்குள் விளையாடியபோது, ஜன்னல் வழியாக தவறி விழுந்துள்ளான். அதர்வா விழுந்தவுடன், அவனது பெற்றோர் பதறியடித்துக் கொண்டு கீழே சென்று பார்த்துள்ளனர். அதைத் தொடர்ந்து அதர்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மும்பையின் கோவாண்டி புறநகர்ப் பகுதியில், அதர்வாவின் குடும்பம் வசித்து வருகின்றது. 

Listen to the latest songs, only on JioSaavn.com