13 வயது மாணவன் டப்பாவாலாக்களுடன் தொடங்கிய ஸ்டார்ட்-அப்

‘பேப்பர்ஸ் என் பென்சில்ஸ்’ என்கிற அந்த நிறுவனம் சரியான நபர்களுக்கு பொருட்கள் சென்றுசேர்கிறதா என்பதை கவனிக்கும் வகையில்  உருவாக்ப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
13 வயது மாணவன் டப்பாவாலாக்களுடன் தொடங்கிய ஸ்டார்ட்-அப்
Mumbai: 

திலக் மேத்தா - மும்பையின் 13 வயது பள்ளி சிறுவன் தான் மும்பையின் இப்போதைய ஹாட் டாபிக். எப்படி என்று கேட்கிறீர்களா ? திலக்மேத்தா தற்போது ஒரு இளம் தொழிற்முனைவராக உருபெற்றிருக்கிறார்.

இவர் மும்பையை மையமாக வைத்து தொடங்கி இருக்கும் நிறுவனம், மும்பையில் இயங்கி வரும் டப்பாவாலாக்களுக்கு உதவும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘பேப்பர்ஸ் என் பென்சில்ஸ்’ என்கிற அந்த நிறுவனம் சரியான நபர்களுக்கு பொருட்கள் சென்றுசேர்கிறதா என்பதை கவனிக்கும் வகையில் உருவாக்ப்பட்டுள்ளது.

இதுகுறித்து திலக் தெரிவிக்கையில், இது என்னுடைய கனவுத் திட்டம். கடந்த ஆண்டு எனக்கு உருவான இந்த திட்டத்திற்கு தொடர்ந்துவடிவம் கொடுத்து இன்றுநான் இதனைத் துவங்கி இருக்கிறேன். இதுதொடர்பாக ஒரு ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தேன் என்றுஅவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிறுவனம் மும்பை தாதர் ரயில் நிலையத்தில் இருந்து நடத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு என் தந்தைபொருளாதார வகையிலும், மொபைல் ஆப் வடிவமைப்பதற்கும் மிகவும் உதவியாக இருந்தார்.

இதுகுறித்து டப்பாவாலாக்கள் அமைப்பின் தகவல் தொடர்பாளர் கூறுகையில், எங்களுக்கு இந்த ஐடியா மிகவும் பிடித்து இருக்கிறது. அதுபோல, எங்களுக்கு இது அதிக வருவாயையும் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................