நள்ளிரவில் தடம் புரண்ட பூர்வா எக்ஸ்பிரஸ்: 13 பேர் படுகாயம்!

Poorva Express: கான்பூர் ரூமா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த பூர்வா எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 1 மணி அளிவல் தடம் புரண்டது.

Poorva Express Derail: பிரயாக்ராஜ் நகரிலிருந்து டெல்லி நோக்கி பூர்வா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது.

Kanpur, Uttar Pradesh:

12 பெட்டிகளுடன் டெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ்(Poorva Express) ரயில் நள்ளிரவில் கான்பூர்(Kanpur) அருகே சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டது. இதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ரூமா என்ற கிராமத்தின் வழியே நள்ளிரவு ஒரு மணியளவில் சென்றபோது, திடீரென தடம் புரண்டது(Derail).

இந்த விபத்து(Accident) சம்பவம் குறித்து வீடியோ மூலம் பெட்டிகளின் சேதாரம் குறித்து அறிய முடிகிறது. விபத்து நடந்த உடனடியாக படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சம்பவ இடத்திற்கு 15 ஆம்புலான்ஸ்கள் விரைந்தது வந்தது.

இந்திய ரயில்வேயின் செய்திதொடர்பாளர் சமித்தா ஷர்மா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, மருத்துவ உபகரணங்களுடன் விபத்து நிவாரண ரயில், சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் முக்கிய ரயில் தடங்களில் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

j3vreq4o

இதனால், தொலைதூரங்களில் இருந்து டெல்லி நோக்கி வரும் அனைத்து ரயில்களும் தாமதமடைந்துள்ளன.

தொடர்ந்து, மீட்பு பணிகளை காவலர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர். 45 பேர் கொண்ட தேசிய பேரிடர் படை குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்து பகுதியில் இருந்து பயணிகளை கான்பூர் அழைத்து வர பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மேலும், கான்பூரிலிருந்து அவர்களை டெல்லி(Delhi) செல்ல மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

(With inputs from ANI)

More News