மீட்பு படையை திணறடித்த 13 அடி ராஜ நாகம்!! பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் பிடிபட்டது!

உலகின் நீளமான மற்றும் அதிக விஷத் தன்மை கொண்ட பாம்பாக ராஜநாகம் கருதப்படுகிறது. இதில் இருந்து எடுக்கப்படும் விஷம் பொடியாக மாற்றப்பட்டு அவை புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

மீட்பு படையை திணறடித்த 13 அடி ராஜ நாகம்!! பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் பிடிபட்டது!

4 மீட்டர் நீளம் கொண்ட ராஜநாகம்.

Bangkok, Thailand:

தென் கிழக்கு ஆசீய நாடான தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், ராஜநாகம் புகுந்தது. கழிவு நீர்க் குழாய்க்குள் சென்று பல மணிநேரம் போக்குக் காட்டிய அந்தப் பாம்பை மீட்பு படையினர் போராடி பிடித்தனர். 

முதலில் ராஜநாகத்தை அபார்ட்மென்ட்டின் காவலர் பார்த்து, அதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். 

கழிவு நீர் பைப்புக்குள் பாம்பு சென்று ஒழிந்து கொண்டதால் அதை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக அதனை மீட்பு படையினர் பிடித்தனர். 
 
j4isbom8

மொத்தம் 13 அடி நீளம் கொண்டதாக ராஜநாகம் இருந்தது. தாங்கள் பிடித்ததிலேயே இந்தப் பாம்புதான் அதிக நீளம் உடையாக இருந்தது என்று மீட்பு படையினர் கூறியுள்ளனர். பின்னர் இந்தப் பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், ராஜநாகம், பெரிய பல்லி போன்ற ஊர்வன உயிரினங்கள் அதிகளவு காணப்படுகின்றன. குறிப்பாக பாம்பு வகைகள் இங்கு அதிகம். பாங்காக்கில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் என்பது முன்னதாக காட்டுப்பகுதியாக இருந்துள்ளது. அதனை பாம்புகளின் கோட்டை என்று அழைத்தார்களாம். 

உலகின் நீளமான மற்றும் அதிக விஷத் தன்மை கொண்ட பாம்பாக ராஜநாகம் கருதப்படுகிறது. இதில் இருந்து எடுக்கப்படும் விஷம் பொடியாக மாற்றப்பட்டு அவை புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
 
Click for more trending news

More News