This Article is From Dec 02, 2019

Video: 12 அடி நீளமுள்ள முதலையை பிடிக்க மீட்பு குழுவினர் படும் பாடு

12 அடி நீளமுள்ள முதலை இருப்பது குறித்து நர்மதா கால்வாயின் சூரிய ஆலை நிலையத்தின் பொறியாளர் காலை 10.30 மணிக்கு தெரிவித்தார்.

Video: 12 அடி நீளமுள்ள முதலையை  பிடிக்க  மீட்பு குழுவினர் படும் பாடு

முதலையை மீட்க 5 மணி நேரத்திற்கும் மேலாகியது

 குஜராத் மாநிலம் வதோதரா கிராமத்தில் வயல் பகுதியில் 12 நீளமுள்ள முதலை ஒன்று மீட்கப்பட்டது. மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் மிகப்பெரிய முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலையை மீட்க 5 மணி நேரத்திற்கும் மேலாகியது.

ராவல் கிராமத்தில் அமைந்துள்ள நர்மதா கால்வாயில் சூரிய ஆலை நிலையத்திலிருந்து முதலை வந்துள்ளது. கிராம மக்கள் இந்த் கால்வாயிலிருந்து தங்கள் நிலத்திற்கான தண்ணீரை பாய்ச்சுகிறார்கள். “ராவல் கிராமத்தில் 12 அடி நீளமுள்ள முதலை இருப்பது குறித்து நர்மதா கால்வாயின் சூரிய ஆலை நிலையத்தின் பொறியாளர் காலை 10.30 மணிக்கு தெரிவித்தார். முதலையை மீட்க எங்களுக்கு ஐந்து, ஆறுமணி நேரம் ஆனது” என்று வனவிலங்கு மீட்பு வீரர் ஹேமந்த் வாத்வானா  ஏ.என்.ஐயிடம் கூறினார்.

மிகப்பெரிய முதலை மக்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியது. பெரிய முதலையை பிடிக்க மீட்பு படையினர் படும் சிரமங்களை கீழ்கண்ட காணொளியில் காணலாம்.

அருகில் உள்ள ஏரியில் முதலை விடுவிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி பிடிஐ நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Click for more trending news


.