This Article is From Apr 03, 2019

100 நாட்கள் வேலை திட்டம் 365 நாட்களுக்கு வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

100 நாட்கள் வேலை திட்டம் 365 நாட்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

100 நாட்கள் வேலை திட்டம் 365 நாட்களுக்கு வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், திருப்பூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தற்போது 100 நாட்கள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலி இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்று அவர் கூறினார். தொடர்ந்து 100 நாட்கள் வேலை திட்டம் 365 நாட்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளர். மேலும், நகைக்கடன் தள்ளுபடி திமுக தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

.