பிரதமர் மோடியுடன் அக்ஷய்குமார் நடத்திய நேர்காணல் - 10 ஹைலைட்ஸ்!

மக்களவைத் தேர்தல் 2019: நீங்கள் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் தான் தூங்குகிறீர்கள், சராசரியாக உடலுக்கு 7 மணி தூக்கம் அவசியம் தேவை என்று அக்ஷய் குமார், பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Lok Sabha elections 2019: பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து இந்த நேர்காணல் நடந்துள்ளது.


New Delhi: 

பிரதமர் மோடியுடன் அரசியல் அல்லாத நேர்காணலை நடிகர் அக்‌ஷய் குமார் நடத்தியுள்ளார். இதில், பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி சுவாரசிய பதிலளித்துள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியுடன் அக்ஷய் குமார் மேற்கொண்ட நேர்காணலில் சில ஹைலைட்ஸ்;

நான் ஒருபோதும் பிரதமராவேன் என்று நினைத்தது இல்லை, சராசரி மனிதன் அவ்வாறு சிந்திக்க

மாட்டான். எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தாலே, அதற்காக அனைவருக்கும் லட்டு கொடுத்து

மகிழ்ச்சியடையும் குடும்ப பிண்ணியில் இருந்த வந்தவன் நான்.

எம்.எல்.ஏ ஆகும் முன் வரை எனக்கு வங்கிக்கணக்கு கிடையாது. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது, தீனா வங்கியில் இருந்து வந்தவர்கள் எங்களுக்கு

சேமிப்பு கணக்குகளை தொடங்கினார். ஆனால், அதில் எனக்கு போதிய இருப்பு இருந்ததில்லை.

இதனால், எனது கணக்கை சோதித்த அதிகாரிகள் செயல்படாமல் இருந்ததால், என் சேமிப்பு கணக்கை முடக்கிவிட்டார்கள்.

நான் ஒரு நாடோடியாக இருந்து, என் கேள்விக்கு நானே விடை தேடிக்கொள்பவன். சிறுவயதிலிருந்தே தனித்து இயங்குகிறேன். அது ஒரு பற்றின்மை உணர்வுக்கு வழிவகுத்துவிட்டது. இதனால், எனது தாயை என்னுடன் வருமாறு அழைத்தால் அவர் கிராமத்தில் நேரத்தை செலவழிக்கவே விரும்புவார். எனக்கும் அவருடன் இருக்க நேரம் இருக்காது.

நான் ஒருபோதும் கோபமடைந்தது இல்லை. கோபம் மனித இயல்பின் ஒரு பகுதியே. இவை எதிர்மறையாக பரவும் உணர்வுகளாகும். நான் அலுவலக உதவியாளராக இருந்தது முதல் தற்போது வரை, கோபத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

கோபமடைவதற்கும், கண்டிப்புடன் நடந்து கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. சில நேரங்களில் நீங்கள் உங்கள் ஒழுக்கத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் நான் உணர்ச்சிவசப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் அது குறித்து எழுதுவேன். பின்னர் அது ஆராய்ந்து பார்ப்பேன். அது என் தவறுகளை உணர்ந்து கொள்ள உதவும். அதற்கும் எனக்கு நேரமில்லை. இப்படி தான் ஒரு சூழ்நிலையில் சமாளிப்பதற்கு என்னை நான் பழக்கிக்கொண்டேன்.

மக்கள் கண்டிப்பாக இதனை ஆச்சர்யமாக பார்ப்பார்கள், இதனை நான் தேர்தல் நேரத்தில் கூறக்கூடாது. மம்தா எனக்கு ஒவ்வொரு வருடமும் அவரே தேர்வு செய்து எனக்கு ஒன்று அல்லது இரண்டு குர்தா அனுப்புவார்.

சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற தூய்மை என்பது மிகவும் அவசியமானது. 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது என்பது நாட்டின் சாதனை, எனக்கு உரியது அல்ல.

என்னைப்பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து சந்தோஷப்படுவேன். குறிப்பாக அதில் இருக்கும் கற்பனைதிதிறன் மகிழ்ச்சியை கொடுக்கும்.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................