This Article is From Oct 10, 2019

Assembly Elections 2019- “1 ராணுவ வீரர் உயிருக்கு 10 எதிரிகளின் உயிர்…”- Amit Shah!

பாஜக ஆட்சியில், 1 ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டால், அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என்பது மொத்த நாட்டுக்கும் தெரியும் - Amit Shah

Assembly Elections 2019- “1 ராணுவ வீரர் உயிருக்கு 10 எதிரிகளின் உயிர்…”- Amit Shah!

ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் அரசு- Amit Shah

Sangli, Maharashtra:

மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah). அப்போது அவர், காங்கிரஸ் (Congress) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party) கட்சிகளை கடுமையாக சாடினார்.

பிரசாரத்தின்போது அமித்ஷா, “ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் அரசு. ராகுல் காந்தி மற்றும் சரத் பவார், 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் ஆதரவாக இருக்கிறார்களா அல்ல எதிர்க்கிறார்களா என்பதில் தெளிவான கருத்து கூற வேண்டும்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், 1 ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டால், அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என்பது மொத்த நாட்டுக்கும் தெரியும். 

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, முந்தைய காலத்தில் மாநிலத்துக்கு என்ன செய்தது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்” என்று பேசினார். 

.