சமையல் சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு! - பலர் படுகாயம்!

Mau Cylinder Blast: இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Mau cylinder blast: கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவே மாவட்டத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


Mau: 

கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பலர் ஈடிபாடுகளில் சிக்கியிருக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவே மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் தாக்கம் மிக வலுவாக இருந்துள்ளது. இதனால், அந்த முழு கட்டிடமே இடிந்து விழுந்தது. 

இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறும்போது, பெரும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் இருந்த பெரும் தீ பற்றி எரிந்தது என்று தெரிவித்துள்ளனர். 

இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படுள்ளது. விபத்து சம்பவம் ஏற்பட்ட இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் என ஒரு பெரும் கூட்டமே அந்த இடத்தை சுற்றியுள்ளது. 

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். 

மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................