நடுக்கடலில் நின்றிருந்த கப்பலில் தீ விபத்து: 28 பேர் மீட்பு - ஒருவர் மாயம்!

இதில் 28 பேரை கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளது. எனினும், ஒரு மாலுமியைக் மட்டும் காணவில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் நின்றிருந்த கப்பலில் தீ விபத்து: 28 பேர் மீட்பு - ஒருவர் மாயம்!

நடுக்கடலில் நின்றிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

New Delhi:

விசாகப்பட்டினம் அருகே கடலில் 29 பேருடன் சென்ற கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கப்பலில் இருந்த 29, பேரும் உயிரைக் காக்க கடலில் குதித்துள்ளனர். 

இதில் 28 பேரை கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளது. எனினும், ஒரு மாலுமியைக் மட்டும் காணவில்லை, என தெரிகிறது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ காட்சியில், பல சிறிய கப்பல்கள், தீ பிடித்து எரியும் கப்பலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. 

ஜாகுவார் என்ற ஆதரவு கப்பலில் இருந்து இன்று காலை 11:30 மணியளவில் பெரும் சத்தம் கேட்டுள்ளது. சில நிமிடங்கள் கழித்து, கப்பலில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. 

இதைத்தொடர்ந்து, கப்பலில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்கள் உயிர்களை காக்க கடலில் குதித்தனர். 

Newsbeep

இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து, மாயமான மாலுமியை தேடும் பணியும், கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கவும் கடலோர காவல்படை போராடி வருகிறது. 

இதற்காக, விசாகப்பட்டினம் துறைமுகத்தின் படகுகளுடன் மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்க கடலோர காவல்படையின் வேகமான ரோந்து கப்பலான, ராணி ராஷ்மோனியும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.