கேரளாவில் யானை உயிரிழப்பில் ஒருவர் கைது!

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் தற்போது தெரிவித்துள்ளார். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் வெடி பொருட்களை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்

கேரளாவில் யானை உயிரிழப்பில் ஒருவர் கைது!

நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் வெடி பொருட்களை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்

Thiruvananthapuram:

கேரளாவில் பாலக்காடு பகுதியில் கர்ப்பமாக இருந்த பெண் யானை ஒன்று சமீபத்தில் உயிரிழந்தது. பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தினை உண்டதால் யானையின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் உணவு உண்ணாமல் தவித்து வந்த யானை ஒரு ஆற்றில் இறங்கி நின்று கொண்டே உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. பலர் இணையதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் தற்போது தெரிவித்துள்ளார். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் வெடி பொருட்களை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.காவல்துறையினர் இதில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர் என பாலக்காடு மாவட்ட காவல்துறை தலைவர் ஜி.சிவா விக்ரம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக வனப் பகுதிகளையொட்டியுள்ள விளைநிலங்களை காட்டுப்பன்றி போன்றவற்றிடமிருந்து காப்பாற்ற விவசாயிகள் பட்டாசுகள் நிரம்பிய பழங்களை பயன்படுத்துவார்கள். இது போன்ற ஏதாவது ஒரு பழத்தினை யானை உண்ட முயற்சிக்கும்போது பட்டாசு வெடித்து யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

பலத்த காயமடைந்த யானை சில நாட்கள் வேறெந்த உணவையும் உட்கொள்ள முடியாமல் தவித்து பின்னர் ஒரு ஆற்றில் இறங்கி நின்றுகொண்டிருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து யானை மே 27 அன்று பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த யானை கருவுற்றிருந்ததும், பட்டாசு காயம் ஏற்பட்டதால் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் வெடி பொருட்களை விநியோகம் செய்தாக குற்றம் சாட்டிப்பட்டிருக்கிறார்.

காலநிலை மாற்றம் உள்ளூர் சமூகங்கள் வன விலங்குகளை மோசமாக பாதிக்கின்றது என்றும், இந்த வழக்கு விசாரணையானது மனித-வனவிலங்கு மோதல் நிகழ்வுக்கு தீர்வு காண முயற்சிக்கும் என்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.