யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ரிசர்வ் வங்கி!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை நீக்கியது, யெஸ் வங்கி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கடன் மோசடி காரணமாக யெஸ் வங்கி கடுமையான நெருக்கடியில் இருந்தது.

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ரிசர்வ் வங்கி!! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஹைலைட்ஸ்

  • கடன்நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கி யெஸ் பேங்கிற்கு கட்டுப்பாடு விதித்தது
  • இன்று மாலை 6 மணியுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன
  • ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ வங்கி இன்று மாலை 6 மணியுடன் தளர்த்திக் கொண்டது. இதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து யெஸ் பேங்க் தனது ட்விட்டர் பக்கத்தில், 'யெஸ் வங்கியின் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. எங்களின் முழுமையான சேவையை நீங்கள பெற்றுக் கொள்ள முடியும். உங்களது பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மத்திய அரசுத் திட்டத்தின் படி, நிதி நெருக்கடியில் சிக்கிய தனியார் வங்கியான யெஸ் வங்கியின் பங்குகளை எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்தே, சிக்கலிலிருந்த வங்கியின் நிலை உடனடியாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 

தனியார் வங்கியான யெஸ் வங்கி அண்மையில் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக் கீழ் கொண்டுவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. 

ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் கட்டுப்பாடு காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்துவதிலும், யுபிஐ வழியாகப் பணம் செலுத்துவதிலும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக யெஸ் வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கடன்களைச் செலுத்துவதிலும், சம்பளம் வழங்குவதிலும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகப் புகார் அளித்துள்ளனர். இதேபோல், ஹோலி பண்டிகையின்போது தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் யெஸ் பேங்க் மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com