கட்டுப்பாடுகள் தளர்வு: நாளை மறுநாள் முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் யெஸ் வங்கி!

மத்திய அரசுத் திட்டத்தின் படி, நிதி நெருக்கடியில் சிக்கிய தனியார் வங்கியான யெஸ் வங்கியின் பங்குகளை எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன.

கட்டுப்பாடுகள் தளர்வு: நாளை மறுநாள் முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் யெஸ் வங்கி!

கடன் வழங்குநர்கள் குழு யெஸ் வங்கியில் பங்குகளை வாங்குவதாக உறுதி தெரிவித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • Lenders, led by SBI, have committed to pick stake in the troubled bank
  • RBI placed Yes Bank under a moratorium, earlier this month, till April 3
  • Customers have been unable to access internet banking and ATM services

கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான தனியார் வங்கியான யெஸ் வங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் தங்களது முழுமையான வங்கி சேவையை மீண்டும் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யெஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, வரும் மார்ச்.19 2020, முதல் எங்களின் 1,132 வங்கி கிளைகளிலும், வழக்கம் போல் எங்களது முழுமையான வங்கி சேவையை மீண்டும் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசுத் திட்டத்தின் படி, நிதி நெருக்கடியில் சிக்கிய தனியார் வங்கியான யெஸ் வங்கியின் பங்குகளை எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்தே, சிக்கலிலிருந்த வங்கியின் நிலை உடனடியாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தங்களது அனைத்து விதமான டிஜிட்டல் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் தொடரலாம் என்றும் யெஸ் வங்கி தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 

தனியார் வங்கியான யெஸ் வங்கி அண்மையில் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக் கீழ் கொண்டுவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. 

ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் கட்டுப்பாடு காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்துவதிலும், யுபிஐ வழியாகப் பணம் செலுத்துவதிலும்,
ஏடிஎம்களில் பணம் எடுப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக யெஸ் வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கடன்களைச் செலுத்துவதிலும், சம்பளம் வழங்குவதிலும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகப் புகார் அளித்துள்ளனர். இதேபோல், ஹோலி
பண்டிகையின்போது தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தனர். 

Listen to the latest songs, only on JioSaavn.com