புதிய சிஇஒ நியமிக்கப்பட்ட பின்னர் பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகள் விலை அதிரடி உயர்வு

தியரி டெலாபோர்ட் பிரபல கார்ப்பரேட் நிர்வாகி ஆர்தர் ஆண்டர்சனுடன் 1992-ல் சீனியர் ஆடிட்டராக தனது பணியை தொடங்கினார். பிரபல நிறுவனமான கேப்ஜெமினியின் தலைமை செயல் அதிகாரியாக டெலாபோர்ட் பொறுப்பு வகித்திருக்கிறார். 

புதிய சிஇஒ நியமிக்கப்பட்ட பின்னர் பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகள் விலை அதிரடி உயர்வு

நீமுச்வாலா  முன்னதாக டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றியவர்.  அவர் விப்ரோவில் கடந்த 2015-ல் இணைந்தார். 

புதிய தலைமை செயல் அதிகாரியை  நியமித்த பின்னர் பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகள் அதிரடி உயர்வை சந்தித்துள்ளன. பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ,  பிரபல  கார்ப்பரேட் நிர்வாகி தியரி  டெலாபோர்ட்டை தனது புதிய தலைமை  செயல்  அதிகாரியாக நியமித்துள்ளது. 

தற்போதைய தலைமை செயல் அதிகாரி அபிதாலி, நீமுச்வாலாவிடம் இருந்து  டெலாபோர்ட், ஜூன் 1-ம் தேதியில் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இந்த  நிலையில் மும்பை பங்குச் சந்தையில்  விப்ரோவின் பங்குகள் ரூ. 9 அல்லது  5 சதவீதம் அதிகரித்து ரூ. 209.75க்கு விற்பனையாகிறது. 

தியரி டெலாபோர்ட் பிரபல கார்ப்பரேட் நிர்வாகி ஆர்தர் ஆண்டர்சனுடன் 1992-ல் சீனியர் ஆடிட்டராக தனது பணியை தொடங்கினார். பிரபல நிறுவனமான கேப்ஜெமினியின் தலைமை செயல் அதிகாரியாக டெலாபோர்ட் பொறுப்பு வகித்திருக்கிறார். 

விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக அபிதாலி நீமுச்வாலா கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் ஓய்வு அளிக்கப்படும் என்று விப்ரோ கடந்த ஜனவரியில் தெரிவித்திருந்தது. 

நீமுச்வாலா  முன்னதாக டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றியவர்.  அவர் விப்ரோவில் கடந்த 2015-ல் இணைந்தார்.