சுகன்யா சம்ரிதி யோஜனா: ஏன் 10ம் தேதிக்குள் உங்கள் பணத்தை செலுத்த வேண்டும்

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது இந்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத் திட்டம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா: ஏன் 10ம் தேதிக்குள் உங்கள் பணத்தை செலுத்த வேண்டும்

பிரதமர் மோடியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது

ஹைலைட்ஸ்

  • சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தொடங்கப்பட்டது
  • சுகன்யா சம்ரிதி யோஜனா தற்போதைய வட்டி 8.1 சதவிகிதம் ஆகும்
  • இந்தத் திட்டத்தின் மூலம் வருமான வரி விலக்கும் பெற முடியும்

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது இந்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை அந்தக் குழந்தையின் குடும்பம் சேமிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கி வைத்தார். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்காக இந்த நிதி சேமிப்புத் திட்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கு, அதிகபட்சம் 21 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். ஒரு பெண் குழந்தை பிறந்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் இந்த வங்கி கணக்கை திறந்து கொள்ளலாம். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு 10 வயது முடிவடைவதற்குள் இந்த கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், இந்த கணக்கில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த கணக்கை அஞ்சல் அலுவலகம் மூலமாகவோ, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ திறந்து கொள்ளலாம்.

ஆனால், இந்த கணக்கைத் தொடங்கும் வழிமுறைகளில் சில விஷயங்களை கவனமாகச் செய்தால், மாதா மாதம் நிதி அதிகரிப்பு செய்ய முடியும். அதாவது, ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாளுக்கு முன்னர் பணம் செலுத்துவதன் மூலம் நிதி அதிகரிப்பு செய்ய முடியும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஒரு மாதத்தின் 10 ஆம் தேதிக்குள் பணம் செலுத்திவிட்டால், அந்த மாதத்தில் 8.1 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இது குறித்து அம்பிட் அஸ்ஸட் நிறுவனத்தின் இயக்குந் சித்தார்த் ரஸ்தோகி கூறுகையில், `இந்தத் திட்டத்தில் 10 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்தும் பணத்தால், எந்த வட்டியும் கிடைக்காது. மாறாக அந்தப் பணம் சேமிப்பில் வைக்கப்படும்' என்றார்.

5finace.com இணையதளத்தின் நிறுவனர் தினேஷ் ரோகிரா இது குறித்து பேசுகையில், `ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்தப்படும் பணம் மூலம் அந்த மாதத்துக்கு உண்டான மொத்த வட்டியும் வந்துவிடும். இது அந்த மாதத்தில் சில நூறு ரூபாயாகவே இருக்கும். ஆனால், பல ஆண்டுகள் இதைப் போல் செய்து வந்தால், நிதிப் பெருக்கம் மிக அதிகமாக இருக்கும்' என்று கூறினார். 

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் பணம் செலுத்துவதன் மூலம், 80c விதிமுறையின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். ஒரு சமயம் பெண் குழந்தையின் மேற்படிப்பு செலவுக்கு பணம் தேவையென்றால், 18 வயது நிரம்பியவுடன் 50 சதவிகித சேமிப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

More News