வீட்டை வாடகைக்கு கொடுக்கிறீங்களா? இந்த விஷயத்தில கவனம்

வீட்டை வாடகைக்கு விடுவதில் சில அடிப்படை விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடம்

வீட்டை வாடகைக்கு கொடுக்கிறீங்களா? இந்த விஷயத்தில கவனம்

ஹைலைட்ஸ்

  • வீடு வாடகைக்கு விடுவதற்கு முன் சில அடிப்படைகள் தெரிந்து கொள்வது அவசியம்
  • போலீஸுக்கு தகவலை பறிமாறுவது முக்கியம்
  • இது குறித்து சட்டம் இல்லையென்றாலும் பின்பற்றுவது அவசியம்

சொந்த வீட்டின் மாடியில் ஒரு சின்ன இடம் இருந்தால் கூட அதில் ஒரு வீட்டை கட்டி வாடகை விடுவது நகரங்களில் சாதரணமாகி விட்டது. நிலையான வருமானம் இதன் மூலம் வரும் என்பதால், இதைப் பலரும் செய்கின்றனர். மேலும், நகரங்களில் பெருகி வரும் ஜனத் தொகைக்கு வாடகை வீடு தான் ஒரே தீர்வாக இருந்து வருகிறது. ஆனால், வீட்டை வாடகைக்கு விடுவதில் சில அடிப்படை விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடம்.

டெனன்ட் வெரிஃபிக்கேஷன் என்று கூறப்படும் வாடகை இருப்பவர்களின் ஆவணங்களை சரி பார்த்தல், என்பது வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயம். யாரிடம் வீட்டை வாடகைக்குக் கொடுத்திருக்கிறோம் என்பதை ஆதரபூர்வமாக தெரிந்து கொள்ளவே இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். 

நகரங்களில் வீடு வாடகைக்கு விடுவோரின் வசதிக்காகவே போலீஸ் வெரிஃபிக்கேஷன் ஃபார்ம் இணையத்தில் கிடைக்கின்றது. இதை தரவிறக்கம் செய்து, வாடகைக்கு வீடு எடுப்பவரிடம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்ல வேண்டும். இந்தப் படிவத்தில், வாடகை இருக்கப் போகிறவர்கள் அவர்களின் நிரந்தர முகவரி, ஆதார் கார்டு என் போன்ற முக்கிய விஷயங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். இப்படி செய்வதன் மூலம் ஏதாவது பிரச்சினை என்றால், காவல் துறையை சுலபமாக அணுக முடியும். 

ஒரு வேளை வாடகை இருப்பவர்களைப் பற்றி போலீஸுக்கு சரியான தகவலை சொல்லாமல் இருந்தால் பிரச்னை வர வாய்ப்புள்ளது. வாடகை இருப்பவர், ஏதாவது பிரச்னையில் சிக்கி கைதானால், வீட்டு உரிமையாளருக்கும் பிரச்சினை வரும். 

இது குறித்து சட்ட நிபுணர் ஒருவர், `வாடகை இருப்பவரைப் பற்றிய தகவல்களை போலீஸுக்கு கொடுத்தேயாக வேண்டும் என்ற சட்ட நிர்பந்தமெல்லாம் இல்லை. ஆனால், வாடகை இருப்பவர் அடிக்கடி கைதானால், பிறகு வீட்டுக்கு சொந்தக்காரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது' என்று கூறி, ஏன் வாடகை இருப்பவர்களைப் பற்றிய தகவல்களை கலெக்ட் செய்ய வேண்டும் என்கின்ற முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.