மத்திய பட்ஜெட்: ரயில்வே துறைக்கு என்ன எதிர்பார்க்கலாம்..?

2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது.

மத்திய பட்ஜெட்: ரயில்வே துறைக்கு என்ன எதிர்பார்க்கலாம்..?

2017 முதல் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது

2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு வரை, ரயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டும் தனித் தனியாகத்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. அதையடுத்து 2017-ல் முதன்முறையாக இரண்டு பட்ஜெட்டுகளையும் ஒன்றாக தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

ரயில்வே துறை குறித்து 2017 மற்றும் 2018 பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

பட்ஜெட் 2018:

1.ரயில்வே துறையின் மொத்த செலவுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று கூறினார் ஜெட்லி.

2.18,000 கிலோ மீட்டருக்கு ரயில் தடம் போட இலக்கு வைக்கப்பட்டது.

3.உலகத் தரம் வாய்ந்த ரயில்களை பயன்பாட்டுக்கு விடுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.

4.36,000 கிலோ மீட்டருக்கு ரயில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் 4,267 ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளை அகற்றுதலுக்கு இலக்கு வைக்கப்பட்டது.

5.600 ரயில் நிலையங்களை நவீனமாக்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டது.

பட்ஜெட் 2017:

1.ரயில்வே துறையின் மொத்த செலவுக்கு 1.31 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று கூறினார் ஜெட்லி.

2.பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ராஷ்டிரிய ரயில் சன்ராக்‌ஷா கோஷ் திட்டத்துக்கு ஓர் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி என்ற ரீதியில் 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

3.2020 ஆம் ஆண்டுக்குள் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளை ஒழிக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

4.500 ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என அறிவிப்பு

5.7,000 ரயில் நிலையங்களுக்கு சூரிய மின்சக்தித் திட்டத்தின் கீழ் எடுத்து வர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

More News