மூட்டை கட்டும் வால்மார்ட் நிறுவனம், பலருக்கு வேலையிழப்பு

வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகளிலிருந்து உள்ளூர் வர்த்தகங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட விதிகள் வால்மார்ட் மற்றும் அமேசான் இன்க் போன்ற நிறுவனங்களை தொந்தரவு செய்துள்ளன.

மூட்டை கட்டும் வால்மார்ட் நிறுவனம், பலருக்கு வேலையிழப்பு

புதிய வணிக இருப்பிடங்களை கண்டுபிடிப்பதற்கான ரியல் எஸ்டேட் குழு கலைக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • Walmart sees no future in physical operations in India, says report
  • Government has repeatedly stymied global consumer brands
  • Political pressure growing for stricter regulation of foreign e-tailers

வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள தங்களின் இருப்பை முடித்து கொள்ள தயாராகி வருவதாகவும் அதனால் மூன்றில் ஒரு பங்கு உயர் அதிகாரிகளை அங்கு நீக்கியுள்ளதாகவும் உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர் இந்தியாவில் புதிய அங்காடி விரிவாக்கத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து ஊழியர்களை குறைக்கும் என்று எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளில்  வேளாண் வணிகம் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான துணைத்தலைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய வணிக இருப்பிடங்களை கண்டுபிடிப்பதற்கான ரியல் எஸ்டேட் குழு கலைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்கன்சாஸை தளமாகக் கொண்ட பெண்டன்வில்லே நிறுவனம் இந்தியாவில் அதன் இருப்பினை எதிர்காலத்தில் காண முடியாது என்றும் 2018 ஆம் ஆண்டில் 16 பில்லியன் டாலருக்கு வாங்கிய இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டுடன் விற்கவோ அல்லது இணைக்கவோ வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகளிலிருந்து உள்ளூர் வர்த்தகங்களை பாதுகாக்க  உருவாக்கப்பட்ட விதிகள் வால்மார்ட் மற்றும் அமேசான் இன்க் போன்ற நிறுவனங்களை தொந்தரவு  செய்துள்ளன.

வெளிநாட்டு இ-காமர்ஸ் தளங்களை கட்டுப்படுத்த அரசியல் அழுத்தம் இப்போது வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வால்மார்ட் தனது மொத்த வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புவதாக கூறியது. ‘மாம்-அண்ட்-பாப்' ஸ்டோர்ஸினை நாடு முழுவதும் தொடங்க திட்டமிட்டிருந்தது. 

இதுகுறித்து வால்மார்ட் இந்தியா உடனடியாக பதிலளிக்கவில்லை.