Walmart நிறுவனத்தில் மறு சீரமைப்பு: 50 ஊழியர்கள் பணி நீக்கம்

இணைய தள வணிகத்திலே அதிக கவனம் செலுத்தவுள்ளது என்றும் கடைகளை திறப்பதில் ஆர்வமில்லை” என்றும் ஆதாரங்கள் கூறியுள்ளனர்.

Walmart நிறுவனத்தில் மறு சீரமைப்பு: 50 ஊழியர்கள் பணி நீக்கம்

மறு சீரமைப்பின் ஒருபகுதியாக அதன் 50 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்துள்ளது

New Delhi:

உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான வால்மார்ட் இன்க்  இந்தியாவில் அதன் மறு சீரமைப்பின் ஒருபகுதியாக அதன் 50 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்துள்ளதாக 3 நேரடி ஆதாரங்கள் தெரிவித்ததாக ராய்ஸ்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை வால்மார்ட் நாட்டில் தனது மொத்த வணிகத்தை விரிவுபடுத்துவதில் எதிர்கொண்டு வரும் போராட்டங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. 

பெண்டன்வில்லி, ஆர்க் சார்ந்த நிறுவனம் தற்போது 28 மொத்த கடைகளை நடத்தி வருகிறது. அங்கு சிறிய கடைக்காரர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. சில்லறை நுகர்வோருக்கு அல்ல. நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவில் உள்ள நிர்வாகிகளுக்கு பணியிழப்பு பெரிதும் பாதித்தது. ஏனெனில் மொத்த வளர்ச்சியின் மாதிரி வலுவாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் இல்லை என்று இரண்டு நெருங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. “இணைய தள வணிகத்திலே அதிக கவனம் செலுத்தவுள்ளது என்றும் கடைகளை திறப்பதில் ஆர்வமில்லை” என்றும் ஆதாரங்கள் கூறியுள்ளனர். வால்மார்ட் நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. வால்மார்ட் நிறுவனம் இ-காமர்ஸ் துறையில் தைரியமான சவால்களை முன்வைத்துள்ளது. 

2018-ஆம் ஆண்டில் ஆன்லைன் சந்தையில் ஃபிளிப்கார்ட்டில் பெரும்பான்மையான பங்குகளை வாங்க 16 பில்லியன் டாலர் செலுத்தியது. இதுதான் உலகளவில் மிகப்பெரிய கையகப்ப்டுத்தலாக உள்ளது.

இரண்டாவது ஆதாரம் கூறிய கருத்தின் படி, வால்மார்ட் புதிய மொத்த கடைகளை திறக்கும் வேகத்தை குறைக்கும் என்றாலும், வணிகத்திலிருந்து வணிகம் மற்றும் சில்லறை இ-காமர்ஸ்  மூலம் விற்பனையை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சில நிர்வாகிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும பலரை திங்களன்று விடுவிக்க முடியும் என்று தெரிவித்தன.

முதலில் செய்தியை வெளியிட்ட எக்னாமிக் டைம்ஸ் செய்திதாளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வால்மார்ட் எப்போதுமே மிகவும் திறம்பட செயல்படுவதற்கான வழிகளை தேடுவதாகவும். எங்கள் நிறுவன கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய இது தேவைப்படுகிறது” என்றும் கூறினார். 

தேசிய அளவில் மொத்தம் 5,300 பேரில் வால்மார்ட் தனது இந்திய தலைமை அலுவல்கத்தில் சுமார் 600 ஊழியர்களைக் கொண்டுள்ளது என்று வட்டாரம் தெரிவித்துள்ளது. 

More News