Budget 2020: பிப்ரவரி 1 தாக்கல்; தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 -ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார்

Budget 2020: பிப்ரவரி 1 தாக்கல்; தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

பொருளாதாரத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்

ஹைலைட்ஸ்

  • First full-year Budget of PM Modi's re-elected government on February 1
  • PM Modi to hold talks on slowdown with economists on Thursday
  • Statistics ministry pegs GDP growth at 11-year low of 5% in FY20

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 -ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார். கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசு தேர்த்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வரக்கூடிய முழு ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவேயாகும்.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை செயல் முறையின் ஒரு பகுதியாக தற்போதைய பொருளாதாரத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் கூட்டம் டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 

தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்:

 பட்ஜெட் 2020 நீண்டகாலமாக பொருளாதார மந்த நிலை மற்றும் ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு எதிராக போராடும் நேரத்தில் இது வருகிறது.

பல பொருளாதார வல்லுநர்கள் பலவீனமான வளர்ச்சியைக் தடுக்க தைரியமான நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு சிறிய நிவாரணத்தை அளித்துள்ளது. 

நடப்பு நிதியாண்டில் அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறை  மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக விரிவடையும் என்றும் 3.3 சதவீத இலக்கை மீறும் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் மூத்த அதிகாரியின் நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளது. 

அரசு வைத்த இலக்கில் அரை சதவீத புள்ளிமட்டுமே அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரி தெரிவித்திருந்தார்.

நாடுகளுக்கிடையேயான போர், பண்ணை உற்பத்தியில் சரிவு, பொருளாதாரம் எதிர்பாராத நிதி தாக்கங்களுடன் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டால் அரசு தனது இலக்கை இழக்கக்கூடும். 

2024ஆம் ஆண்டில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான லட்சிய இலக்கை அரசு நிர்ணயத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணிக்காக தகுதி பெறும் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க பொருளாதாரம் 8 சதவீதத்திற்கு மேல் விரிவாக்க வேண்டும்.

செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆறு ஆண்களுக்கு மேலாக 4.5 சதவீதமாக இருந்தது. பல பொருளாதார வல்லுநர்களும் நிதி நிறுவனங்களும் மோசமான தேவை மற்றும் நுகர்வு மந்தநிலைக்கு மத்தியில் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் வரிகளில் பெரிய அளவில் சலுகைகள் அறிவித்துள்ளதுடன் பொருளாதாரத்தை புதிதாக தொடங்க உள்கட்டமைப்பில் ரூ. 210 லட்சம் கோடி திட்டத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. 

இதற்கிடையில் புள்ளிவிவர அமைச்சகம் இந்த வாரம் தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டியே மதிப்புகளை வெளியிட்டது. மார்ச் 2020 உடன் முடிவடையும் நிதியாண்டில் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் விரிவடையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது உண்மையானால் 11 ஆண்டுகளில் மிக மெதுவான வளர்ச்சியாகவே இது இருக்கும்.

மார்ச் 2019இல் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.9சதவீதமாக இருந்தது. இது 2013-14 முதல் மிக மெதுவான வளர்ச்சி வேகமாகும். 

More News