மத்திய பட்ஜெட் 2020 : நேரலையாக தகவல்களை அறிந்து கொள்வது எப்படி?

மத்திய பட்ஜெட் 2020-21 எதிர்வரும் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மத்திய பட்ஜெட் 2020 : நேரலையாக தகவல்களை அறிந்து கொள்வது எப்படி?

மத்திய பட்ஜெட் 2020 – யை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யவிருக்கும் 2-வது பட்ஜெட்.

மத்திய பட்ஜெட் 2020-21 எதிர்வரும் பிப்ரவரி 1-ம்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு ஒருநாள் முன்பாக பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

முந்தைய நிதியாண்டில் பெறப்பட்ட வருமானம், செலவழித்த தொகை, அடுத்த நிதியாண்டில் செலவழிக்கப் போகும் தொகை உள்ளிட்ட விவரங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும். அடுத்த நிதியாண்டு ஏப்ரல் 1-ம்தேதி தொடங்கவுள்ளது.

பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தாக்கல் செய்வார். வேளாண்மையின் தற்போதைய நிலைமை, தொழிற்சாலை உற்பத்தி, அடிப்படைக்கட்டமைப்பு, வேலை வாய்ப்பு, நிதி மேலாண்மை, ஏற்றுமதி இறக்குமதி, அந்நிய செலாவணி உள்ளிட்டவைகளும் மற்ற பொருளாதார புள்ளி விவரங்களும் இந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.

(Also Read: Budget: What Investors Hope Nirmala Sitharaman Will Do On Income Tax)

மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்படுவதை எப்படி நேரலையாக பார்க்கலாம்..

பின்வரும் NDTV இணைய தள வீடியோ லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை நேரலையாக பார்க்கலாம்.

- ndtv.com/video/live/channel/ndtv24x7 (Also Read: Rs. 2 Lakh Limit On Deduction Against Home Loan Interest Not Enough: Industry Body)

டிவியில் பார்க்க வேண்டும் என்றால் NDTV 24*7 செய்தி சேனலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை பார்க்கலாம். இந்த சேனல் டாடா ஸ்கையில் 604, டிஷ் டிவியில் 603 என்ற எண்ணில் ஒளிபரப்பாகும். (Also Read: Budget 2020 Printing Process Begins With Customary Halwa Ceremony)

எப்போது பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கலாம்?

பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியம் ஜனவரி 31-ம்தேதி மதியம் தாக்கல் செய்வார். அவர் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த டிசம்பர் 2018-ல் நியமிக்கப்பட்டார்.

(Also Read: All You Need To Know About Halwa Ceremony Ahead Of Budget)

மத்திய பட்ஜெட் 2019

மத்தியில் நரேந்திர மோடி அரசு கடந்த 2019 மே மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்து மோடி அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Listen to the latest songs, only on JioSaavn.com