வங்கியில் ரூ.10 லட்சம் வரை பணம் எடுத்தால் வரி - முழு தகவல்கள் உள்ளே

கடந்தவாரம் இந்திய ரிசர்வ் வங்கி NEFT/RTGS மூலம் பணப் பரிவர்த்தனைகளில் உள்ள சேவைக்கட்டணத்தை தள்ளுபடி செய்தது.

வங்கியில் ரூ.10 லட்சம் வரை பணம் எடுத்தால் வரி - முழு தகவல்கள் உள்ளே

இந்த நடவடிக்கையால் பெரும் பணப் பரிவர்த்தனைகள் குறைந்து விடும் என்று அரசாங்கம் நினைக்கிறது

New Delhi:

வங்கிகளில் ஆண்டுக்கு  ரூ.10 லட்சம் வரை  பணம் எடுத்தால் 3-5 சதவீதம் வரை வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவும் காகித பணப் பரிவர்த்தனையை குறைப்பதற்காகவும் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் பெரும் பணப் பரிவர்த்தனைகள் குறைந்து விடும் என்று அரசாங்கம் நினைக்கிறது. நிதி அமைச்சக வட்டாரம் இது குறித்து கலந்துரையாடியுள்ளது. ஆனால் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது எனத் தெரிகிறது.

கடந்தவாரம் இந்திய ரிசர்வ் வங்கி NEFT/RTGS  மூலம் பணப் பரிவர்த்தனைகளில் உள்ள சேவைக்கட்டணத்தை தள்ளுபடி செய்தது. வங்கிகளின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணமுறைகளையும் மறு பரிசீலனை செய்யவுள்ளது. ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக அவ்வாறு செய்துள்ளது. 

இந்த நடவடிக்கை விவாத மட்டத்தில் உள்ளது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் அதன் கண்காணிப்பு என்பது உலகளாவிய நடைமுறைதான் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

More News