இந்தியாவில் கலர் டிவி இறக்குமதிக்கு கட்டுப்பாடு!- பின்னணி என்ன? எந்த நாட்டுக்கு பாதிப்பு?

கலர் டிவிகளும், 63 செமீ வரையிலான எல்சிடி டிவிகளும் இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் கலர் டிவி இறக்குமதிக்கு கட்டுப்பாடு!- பின்னணி என்ன? எந்த நாட்டுக்கு பாதிப்பு?

கடந்த நிதியாண்டில் சீனாவிடம் இருந்து மட்டும் 293 டாலருக்கு கலர் டிவிகள் இறக்குமதி செய்யப்பட்டன

இந்தியாவில் சீன ஆப்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கலர் டிவி இறக்குமதிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

DGFT எனப்படும் வெளிநாட்டு வர்த்த இயக்குநரகம் கலர் டிவி இறக்குமதி தொடர்பாக புதிய கட்டுபாடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில பிரிவுகளில் கலர் டிவிகளை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயாக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு அளவுகளில் உள்ள ரெகுலர் டிவிகள், 63 செ.மீ வரையிலான எல்சிடி டிவிகள் ஆகியவற்றுக்கு பொருந்துகிறது. வர்த்தக அமைச்சகத்தின் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 10 வகைகளுக்கான கலர் டிவிகள்: 

Exim Codeடிவி வகைககள்தற்போதைய கொள்கைதிருத்தப்பட் கொள்கை
8528 72Other, colourஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 11Television set of screen size up to 36 cmஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 12Television set of screen size exceeding 36 cm but not exceeding 54 cஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 13Television set of screen size exceeding 54 cm but not exceeding 68 cஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 14Television set of screen size exceeding 68 cm but not exceeding 74 cஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 15Television set of screen size exceeding 74 cm but not exceeding 87 cஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 16Television set of screen size exceeding 87 cm but not exceeding 105 cஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 17Television set of screen size exceeding 105 cmஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 18Liquid crystal display television set of screen size below 63 cmஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
8528 72 19மற்றவைஇலவசம்கட்டுப்பாடுகள் விதிப்பு
(Source: Commerce & Industry Ministry)


இந்தத் தடைகள் கலர் டிவிகளுக்கு மட்டுமே பொருந்தும். கருப்பு வெள்ளை டிவிகள், மோனோகுரோம் டிவிகளுக்கு கிடையாது. இந்தியாவில் கலர் டிவியின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் விதத்திலும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்புகளில் கிட்டத்தட்ட 36 சதவீதத்திற்கும் மேலான உதரிபாகங்கள் சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிடத்தில் இருந்துதான் பெறப்பட்டு வருகிறது. இதனிடையே சீனா, வியட்நாம், மலேசியா, ஹாங் காங், தென்கொரியா, இந்தோனிஷயா, தாய்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை  இந்திய டிவிகளின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.

தற்போது திருத்தப்பட்ட விதிகளால் இறக்குமதி டிவிகளுக்குப் பதிலாக, உள்நாட்டிலேயே டிவி  உற்பத்தி அதிகரிக்கும். இருப்பினும் இந்தக் கட்டுப்பாடுகளால் சோனி, டிசில், எல்ஜி போன்ற நிறுவனங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் சுமார் 781 மில்லியன் டாலர் மதிப்பிலான கலர் டிவிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் 293 டாலர் மதிப்பிலான டிவிகள் சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்டன.