அசோக் லேலண்ட் சென்னை தொழிற்சாலை : 5 நாட்கள் வேலை இல்லையா…? -ரிப்போர்ட்

உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் 5,000 தொழிலாளர்கள் 3,000 ஒப்பந்த தொழிலாளர்களை பாதிக்கும்.

அசோக் லேலண்ட் சென்னை தொழிற்சாலை : 5 நாட்கள் வேலை இல்லையா…? -ரிப்போர்ட்

இந்திய வாகனத்துறையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக  அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னையில் உள்ள தொழிற்சாலையில்  வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களுக்கு வேலை செய்யாத நாட்களாக அறிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. வணிக வாகனங்களை தயாரிக்கும் சென்னை தொழிற்சாலையில் இந்த தகவல் கிடைத்துள்ளது. வணிக வாகன சந்தையின் மந்தநிலை அசோக் லேலண்டின் நடவடிக்கைக்கு  காரணமென நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. 

உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் 5,000 தொழிலாளர்கள் 3,000 ஒப்பந்த தொழிலாளர்களை பாதிக்கும். வேலை செய்யாத நாட்களுக்கான ஊதியங்கள் பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

அசோக் லேலண்ட் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் இல்லை என்று தெரிவித்து விட்டது.

More News