ராஜிவ் பன்சாலுக்கு ரூ. 12 கோடி வழங்க இன்ஃபோசிஸுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

நடுவர் தீர்ப்பாயத்தின் உத்தரவு முன்னாள் நிதிப்பிரிவு அதிகாரி ராஜிவ் பன்சாலுக்கு ஆதரவாக உள்ளதென்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

ராஜிவ் பன்சாலுக்கு ரூ. 12 கோடி வழங்க இன்ஃபோசிஸுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இன்ஃபோசிஸ் இணை - நிறுவனர் நாராயண மூர்த்தி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதிப்பிரிவு தலைமை அதிகாரி ராஜிவ் பன்சால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக நடுவர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வழங்க வேண்டிய ரூ. 12.17 கோடியை வட்டியுடன் இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு பேட்டியளித்த இன்ஃபோசிஸ் இணை இயக்குனர் நாராயண மூர்த்தி, பன்சாலுக்கு மிக அதிக சம்பளத்தை அப்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஷால் சிக்கா நிர்ணயித்து விட்டதாக கூறினார்.

இன்ஃபோசிஸ் - ராஜிவ் பன்சால் விவகாரம் குறித்து அறிய வேண்டிய தகவல்கள்

1. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நிதிப்பிரிவு தலைமை அதிகாரியாக செயல்பட்ட ராஜிவ் பன்சால் கடந்த 2015-ல் ராஜினாமா செய்தார்.

2. சட்ட விதிமுறைகளின்படி அவருக்கு 24 மாதங்களுக்கான ஊதியத்தை இன்ஃபோசிஸ் அளிக்க வேண்டும். அதன்படி ரூ. 17.38 கோடி அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

3. ஆனால் ரூ. 5 கோடி மட்டுமே அளிக்கப்பட்டதால் பன்சால் தீர்ப்பாயத்தை அணுகினார்.

4. இதுகுறித்து கருத்து தெரிவித்த இன்ஃபோசிஸ் இணை இயக்குனர் மூர்த்தி, பன்சாலுக்கு ஏற்கனவே அதிகப்படியான தொகை ஊதியமாக வழங்கப்பட்டு விட்டதென்று கூறினார்.

5. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக விஷால் சிக்கா நியமிக்கப்பட்டதில் இருந்து அவருக்கும் மூர்த்திக்கும் இடையே பிரச்னை ஆரம்பமானது.

6. நீண்ட கால பிரச்னைக்கு பின்னர் விஷால் சிக்கா வெளியேற்றப்பட்டார்.

7. விஷால் சிக்காவுக்கு பின்னர் இன்ஃபோசிஸ் இணை இயக்குனர் நந்தன் நீல்கேனி, தலைமை செயல் அதிகாரி பொறுப்பை வகிக்காமல் நிறுவனத்தை கவனித்து வந்தார்.

8. கேப்ஜெமினியில் தலைமை அதிகாரியாக இருந்த சலில் பரேக், சிக்காவுக்கு பின்னர் இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. பன்சாலுக்கு அதிகப்படியான சம்பளத்தை விஷால் சிக்கா நிர்ணயித்ததாக மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

10. பன்சாலின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரூ. 12 கோடியை இன்ஃபோசிஸ் அவருக்கு வழங்க வேண்டும்.

 

More News