இனி ரயில் பயணத்தில் ஒரிஜினல் ஆதாருக்கு பதில் டிஜி லாக்கரை பயன்படுத்தலாம் - ரயில்வே

இந்திய ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்கும் போது ஏற்றுக்கொள்ளப்படுகிற அடையாள அட்டைகள்

இனி ரயில் பயணத்தில் ஒரிஜினல் ஆதாருக்கு பதில் டிஜி லாக்கரை பயன்படுத்தலாம் - ரயில்வே

இரயில் பயணங்களின் போது டிஜி லாக்கரில் இணைக்கப் பட்டுள்ள ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை அடையாளமாகப் பயன்படுத்தலாம் என இந்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆவணங்களை சரி பார்க்கவும், அடையாள சான்றிதழ்களை எலக்ட்ரானிக் முறையில் பதிவேற்றம் செய்து தேவையான போது பயன்படுத்தி கொள்ளவும் டிஜி லாக்கர் பயன் படுகிறது. ரயில் பயணங்களின் போது டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்யப் பட்டிருக்கும் ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமத்தை பயணியின் அடையாளமாக இனி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் அசல் ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

digi

டி.ஜி.லாக்கரை எப்படி திறப்பது?

https://digilocker.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உங்களது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி டி.ஜி லாக்கரில் பதிவு செய்யலாம். அதன் மூலம், ஒரு முறை கடவுச்சொல், உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து, வாடிக்கையாளரின் ஐ.டி, கடவுச்சொல்லைப் பதிவிட வேண்டும்.
பதிவிட்ட பின், ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.

இதன் மூலம், யூ.ஐ.டி.ஏ.ஐ, வருமான வரி துறை ஆகியவற்றிலிருந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பிறகு, ஐ.ஆர்.சி.டி.சி போன்ற இணையதளங்களிலும் அதனை பகிர்ந்துக் கொள்ளலாம்.
இறுதியாக, ஆவணங்கள் கோரிக்கையாளர்களால் சரிப்பார்க்கப் பட வேண்டும்.

ஐ.ஆர்.சி.டி.சி, டிஜி லாக்கர் ஆகியவை சி.பி.எஸ்.இ-யுடன் இணைந்து டிஜிட்டல் மதிப்பெண் தாள்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. டிஜி லாக்கர் மூலம் நிரந்தர கணக்கு எண்ணையும் (பேன் கார்டு) பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இந்திய ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்கும் போது ஏற்றுக்கொள்ளப்படுகிற அடையாள அட்டைகள்.

 • இந்திய தேர்தல் அணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை
 • பாஸ்போர்ட்
 • பேன் கார்டு
 • ஓட்டுநர் உரிமம்
 • மத்திய / மாநில அரசு வழங்கிய சீரியல் எண்ணுடன் கூடிய புகைப்பட அட்டை
 • பள்ளி / கல்லூரிகளில் வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை
 • தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கின் புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்
 • புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டு
 • ஆதார் அடையாள அட்டை
 • பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட, மாநில, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த புகைப்பட அடையாள அட்டை
 • சான்றளிக்கப்பட்ட ரேஷன் கார்டு
More News