Profit

போக்குவரத்து துறை புதிய வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது : வரிச்சுமையே காரணம்

1 லட்சம் வருமானம் வந்த இடத்தில் தற்போது வெறும் ரூ. 30,000 மட்டுமே பெறுவதாக தெரிவித்துள்ளார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
Chennai: 

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தனது வணிகத்தில் அறுபது சதவீதம் சரிவைத் தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிய லாரிகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது, இது 28 சதவீத பொருட்கள் மீதான வரி மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), 2 சதவீதம் டீசல் மீதான செஸ், பணத்தை திரும்பப் பெறுவதில் 2 சதவீத வரி விலக்கு மற்றும் லாரிகளின் சுமை திறனை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஊக வருமான வரி போன்ற பல தரப்பட்ட வரியினால் பலரின் நிலைமை மிகவும் அவநம்பிக்கையை மட்டுமே கொடுத்துள்ளது, அரசாங்கம் தொழில்துறையை காப்பாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 3,06,781 யூனிட்களிலிருந்து இந்த ஆண்டு 2,65,164 யூனிட்டுகளாக வணிக வாகனங்களின் விற்பனை ஏற்கனவே குறைந்துவிட்டது என்று சொசைட்டி ஆஃப் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில், 56,866 வணிக வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன, இந்த அறிவிப்புக்குப் பிறகு அதுவும் நிறுத்தப்படலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

லாரிகளின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.

உதாரணமாக, சென்னையில் வினோத் குமார் தனது நான்கு லாரிகளோடு மற்றொரு புதிய வாகனத்தை சேர்க்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

லாரியினால் அவரது வருமானம் ரூ. 1,00,000லிருந்து 70 சதவீதம் குறைந்துள்ளது. 1 லட்சம் வருமானம் வந்த இடத்தில் தற்போது வெறும் ரூ. 30,000 மட்டுமே பெறுவதாக தெரிவித்துள்ளார். 
 "அரசாங்கம் காப்பீடு மற்றும் வரியை உயர்த்தியுள்ளது. அவர்கள் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளனர், ஒரு முறை அமல்படுத்தினால் நாங்கள் எங்கள் வாகனங்களை விற்க வேண்டும். நாங்கள் எந்த புதிய வாகனத்தையும் வாங்க முடியாது." என்று தெரிவித்தார்.

சென்னையில் நூற்றுக்கணக்கான லாரிகள் சும்மா கிடக்கின்றன. இதனால் பலர் தங்கள் கடன்களைத் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். தமிழக மாநில மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறுகையில், "முப்பது லாரிகள் வைத்திருக்கும் ஒவ்வொரு உரிமையாளருக்கும் எந்த வாகன நிறுத்துமிடத்திற்கும் செல்லுங்கள், குறைந்தது பத்து முதல் பதினைந்து லாரிகள் சும்மா இருக்கும்." என்று கூறினார்

எஸ்.எல்.எஸ் டிரான்ஸ்போர்ட்டின் உரிமையாளர் ஏ வி மணி மேலும் கூறுகையில், "வாகனங்கள் ஓடாததால், வங்கிகள் ஆறு முதல் எட்டு மாத கால அவகாசம் அளித்து, தொழிலைக் காப்பாற்ற வட்டி தள்ளுபடி செய்யலாம்." என்று தெரிவித்தார்.


"புதிய மற்றும் பழைய லாரிகள், உதிரி பாகங்கள் மற்றும் டயர்களை வாங்குவதில் ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும். மூன்றாம் தரப்பு காப்பீட்டில் ஜிஎஸ்டிக்கு விலக்கு இருக்க வேண்டும். வாகனத்தின் சுமந்து செல்லும் திறன் மீது மட்டுமே வரி விதிக்கப்பட வேண்டும், "அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸின் பொதுச் செயலாளர் நவீன் குமார் குப்தா என்டிடிவிக்கு தெரிவித்தார்.

போக்குவரத்து துறையில் சுமார் ஐந்து கோடி பேர் பணியாற்றுகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு வாகனத் துறை 3.5 லட்சம் வேலைகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top