கொரோனாவால் முடங்கிய தொழில்துறை! அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்!!

ஊரடங்கு நடவடிக்கையால் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேலும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று,  INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC ஆகிய தொழிற்சங்கங்கள் மத்திய தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவாருக்கு கடிதம் எழுதியுள்ளன.

கொரோனாவால் முடங்கிய தொழில்துறை! அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்!!

10 தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.

ஹைலைட்ஸ்

  • தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • ஊதிய குறைப்பு, வேலையின் பிரச்னை விரைவில் தலைதூக்கும் வாய்ப்புகள் அதிகம்
  • 10 தொழிற்சங்கங்கள் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்து வருகிறது. இதனால் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலையிழப்பு, ஊதிய குறைப்பு உள்ளிட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

ஊரடங்கு நடவடிக்கையால் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேலும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று,  INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC ஆகிய தொழிற்சங்கங்கள் மத்திய தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவாருக்கு கடிதம் எழுதியுள்ளன.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

நாடு சந்தித்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், அனைத்து முறை சாரா தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு திட்டங்களை கொண்டு வர வேண்டும். மனிதப் பேரழிவில் இருந்து, நாட்டின் மனிதவள வேலை சக்தியாக இருக்கும் தொழிலாளர்களை அரசு காப்பாற்ற வேண்டும்.

டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் முறை சாரா தொழிலாளர்களுக்கு ஊதியமற்ற விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றன.

தொழிலாளர் நலத்துறையும், உள்துறை அமைச்சகமும் சேர்ந்து வேலையின்மை மற்றும் ஊதியமின்மை ஆகியவை தொழிலாளர்களுக்கு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்து தருவதுடன், அவர்களுக்கு உண்ண உணவு, இருப்பிடம், சுகாதாரமான தண்ணீர், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

சில ஊர்களில் வங்கி கிளைகள், தொழிலாளர்கள் இருக்கும் இடத்திலிருந்து 40-50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. அவர்கள் பணம் எடுப்பதற்கான வசதிகளை அரசு செய்துதர வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.