2 நாட்களாக விலை மாறாத பெட்ரோல் டீசல்: இன்றைய விலை என்ன?

கடந்த 2 வாரமாக தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்த பெட்ரோல் டீசல் விலை, 2 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருக்கிறது

2  நாட்களாக விலை மாறாத பெட்ரோல் டீசல்: இன்றைய விலை என்ன?

Petrol and diesel prices had touched their all-time highs in some cities last month

ஹைலைட்ஸ்

  • கடந்த 2 வாரங்களாக விலை சரிவில் இருந்தது
  • 2 நாட்களாக விலையில் மாற்றமில்லை
  • கச்சா எண்ணெய் விலை 0.4% சரிவடைந்துள்ளது
கடந்த 2 வாரமாக தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்த பெட்ரோல் டீசல் விலை, 2 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருக்கிறது. தொடர்ந்து 2 வாரம் விலை குறைப்பினால், பெட்ரோல் 2 ரூபாயும், டீசல் 1.5 ரூபாயும் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொருத்து பெட்ரோல், டீசல் விலை மாறுபடுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் விலை கடந்த 18 மாதங்கள் இல்லாத அளவு குறைந்த காரணத்தினாலும், 2014-ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 80 டாலராக உயர்ந்தது, பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்துள்ளது. 

இன்றைய நிலவரம்:

இன்று ஜூன் 14 வியாழன் காலை 6 மணி நிலவரப்படி, பெட்ரோல் விலை  டெல்லியில் லிட்டர் ஒன்றுக்கு 76.43 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 79.1, மும்பையில் 84.26 ரூபாயாகவும், சென்னையில் 79.33 ரூபாயாகவும் உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 67.85 ரூபாயாக, டெல்லியிலும், 70.4 ரூபாயாக கொல்கத்தாவிலும், மும்பையில் 72.24 ரூபாயகவும், சென்னையில் 71.62 ரூபாயாகவும் உள்ளது. கடந்த செவ்வாய் முதல் இதே விலை தான் நீடிக்கிறது

LocationPetrol price in 
Rs. per litre
Diesel price in 
Rs. per litre
Agartala72.2265.99
Aizwal72.3465.18
Ambala76.5468.36
Bangalore77.6769.02
Bhopal82.0271.41
Bhubhaneswar75.2572.73
Chandigarh73.5165.89
Dehradun77.7668.18
Gandhinagar75.7472.92
Gangtok79.569.6
Guwahati78.5770.82
Hyderabad80.9673.75
Imphal74.5265.92
Itanagar72.3365.14
Jaipur79.1772.26
Jammu78.1669.02
Jullunder81.6467.77
Kohima74.9166.22
Lucknow77.2568
Panjim70.4369.05
Patna81.9172.53
Pondicherry75.2370.09
Port Blair65.8963.6
Raipur76.8473.25
Ranchi76.4171.64
Shillong75.8367.67
Shimla76.667.49
Srinagar80.8571.24
Trivandrum79.5372.63
Silvasa74.3568.67
Daman74.2868.6
(Source: iocl.com)

கடந்த மாதம் 14 நாட்கள் தொடர் விலை சரிவுக்கு பின், 16 நாட்களாக தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டது.  மே 14 முதல் மே29 வரை 3.74  ரூபாயில் இருந்து 4 ரூபயாக விலை உயர்த்தப்பட்டது. டீசல் 3.23 ரூபாயில் இருந்து 3.62 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

ஒட்டு மொத்தமாக மே மாதம் 3.66 ரூபாயில் இருந்து 3.93 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் 3.17 ரூபாயில் இருந்து 3.56 ரூபாயாக உயர்த்தப்பட்டது

இன்றைய நிலவரப்படி, அதிக உற்பத்தி காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 76.50 டாலருக்கு விற்கப்படுகிறது. இது 0.4% குறைவாகும். 

5 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.57 ரூபாயாக இருக்கிறது. அமெரிக்க ஃபெடரெல் ரிசர்வ் வட்டி விகதத்தை அதிகரித்ததும் , மேலும் இரண்டு முறை வட்டி விகிதம் அதிகரிக்கக் கூடும் என்று அறிவித்ததால் ரூபாய் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen to the latest songs, only on JioSaavn.com