Profit

தொடர்ச்சியாக உயரும் பெட்ரோல், டீசல் விலை 12-1-19

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று விலையில் மாற்றமேதுமின்றி இருந்தது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தொடர்ச்சியாக உயரும் பெட்ரோல், டீசல் விலை 12-1-19

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று விலையில் மாற்றமேதுமின்றி இருந்தது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

பெட்ரோல் விலை நேற்றும் விலை உயர்ந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 40 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.71.87ஆகவும், டீசல் விலை 61 காசுகள் உயர்ந்தும் ரூ.66.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது. அன்றாட விலை உயர்வு எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top