Profit

இன்னைக்கும் பெட்ரோல் டீசல் விலை குறைஞ்சிருக்குங்க 7-12-18

தொடர்ச்சியான நாட்களில் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
இன்னைக்கும் பெட்ரோல் டீசல் விலை குறைஞ்சிருக்குங்க 7-12-18

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில், இன்றைய நாளும் பெட்ரோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து சற்றே சரிந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.

இன்று (7-12-18) பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையிலிருந்து சற்று சரிந்துள்ளது.

சென்னையில், பெட்ரோல் விலை 42 காசுகள் வரை குறைந்து 73.57 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து ரூ 69.19 ஆக விற்கப்படுகிறது. தொடர்ச்சியான நாட்களில் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



For the latest News & Live Updates on Election Results from each assembly constituency in Madhya Pradesh, Rajasthan, Mizoram, Chhattisgarh, Telangana, like us on Facebook or follow us on Twitter for updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top