கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில், இன்றைய நாளும் பெட்ரோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து சற்றே சரிந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.
இன்று (5-12-18) பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையிலிருந்து மாற்றம் ஏதுமின்றி
சென்னையில், பெட்ரோல் விலை 74.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ70.09 ஆக விற்கப்படுகிறது.
வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.