Profit

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை

இன்று பெட்ரோல் விலை 40 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.71.47ஆகவும், டீசல் விலை 31 காசுகள் உயர்ந்தும் ரூ.66.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது

5 Shares
EMAIL
PRINT
COMMENTS
இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று விலையில் மாற்றமேதுமின்றி இருந்தது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.

பெட்ரோல் விலை நேற்று எந்தவொரு மாற்றமுமின்றி இருந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 40 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.71.47ஆகவும், டீசல் விலை 31 காசுகள் உயர்ந்தும் ரூ.66.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top