Profit

சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்… அவசர கூட்டம் நடத்தும் மத்திய அரசு… அடுத்து என்னவாகும்?

தற்போது நிலவி வரும் பிரச்னை குறித்து டி.ஜி.சி.ஏ அமைப்பு விரிவான அறிக்கை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ‘ஜெட் ஏர்வேஸ் நிறுனம் தொடர்பாக நிலவி வரும் பிரச்னை இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்’ என்று தகவல் கூறினார். 


ஹைலைட்ஸ்

  1. Grounding of aircraft, advance bookings, cancellations to be discussed
  2. Jet Airways is struggling to stay afloat amid debt of over $1 billion
  3. The airline has grounded more than a third of its entire fleet

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், அந்த நிறுவனத்திடம் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு. வலுவிழந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அதிகரிக்கும் எரிபொருள் விலை ஆகியவற்றை முன் வைத்து அதிக அளவிலான விமானங்களை இயக்கப் போவதில்லை என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்திருந்த நிலையில், இன்று அரசு அவரச சந்திப்புக்கு அழைத்துள்ளது. இது குறித்து இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஜெட் ஏர்வேஸ் பொறியாளர் சங்கம், அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘எங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. விமானங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் உள்ளது' என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த 10 முக்கிய தகவல்கள்:

1.தற்போது நிலவி வரும் பிரச்னை குறித்து டி.ஜி.சி.ஏ அமைப்பு விரிவான அறிக்கை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். 

2.ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 1 பில்லயன் டாலர்களுக்கு மேல் கடன் உள்ளது. இந்த கடன் சுமையால் அந்நிறுவனம் வங்கிகள், சப்ளையர்கள், விமானிகள் மற்றும் பலருக்கு சம்பள பாக்கியை வைத்துள்ளது. இதனால் கிட்டத்தக்க 41 விமானங்களை இயக்காமல் வைத்துள்ளது ஜெட் ஏர்வேஸ். இது அந்நிறுவனம் வைத்திருக்கும் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் ஆகும். 

3.ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கும் பொதுத் துறை வங்கிகளிடம் அரசு, இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

4.ஜே.இ.எம்.இ.டப்ள்யூ.ஏ விமானப் பொறியாளர் அமைப்பு, அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘எங்களுக்கென்று தனிப்பட்ட முறையிலான நிதிச் சுமை உள்ளது. எங்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படாததால், நாங்கள் செய்யும் வேலையிலும் அது பிரதிபலிக்கும். இதனால், பல விமானங்களில் சரியான பாதுகாப்பு வசதி இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

5.நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், விமானிகளுக்கு எழுதிய கடிதத்தில், ‘நிறுவனத்தின் நிதிச் சிக்கலை சமாளிக்க கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றுள்ளார். 

6.தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நிலவி வரும் நிதிச் சிக்கலை சமாளிக்க, எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பேசி வருவதாக கோயல் தெரிவித்துள்ளார். 

7.கோயல் மேலும் தெரிவிக்கையில், ‘நிதிச் சிக்கலை சமாளிக்க இயன்று வரை வேகமாக பணி செய்து வருகிறோம். சீக்கிரமே ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்படும். எனவே, நிதிச் சிக்கல் தீர்ந்தவுடன் முதல் பணி, ஊழியர்களுக்கு சம்பள பாக்கி கொடுப்பதுதான்' என்று கூறியுள்ளார். 

8.சில மணி நேரத்துக்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மேலும் 4 விமானங்களை இயக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. 

9.பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ‘ஜெட் ஏர்வேஸ் நிறுனம் தொடர்பாக நிலவி வரும் பிரச்னை இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்' என்று தகவல் கூறினார். 

10.பி.எஸ்.இ சென்செக்ஸில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு, 5 சதவிகதம் சரிந்தது. இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து அந்திறுவனத்தின் பங்கு 19 சதவிகிதம் சரிந்துள்ளது. 

(ஏஜென்சி தகவல்களுடன்)



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top