This Article is From Aug 07, 2019

கடும் சரிவை எதிர்கொள்ளும் ஆட்டோ மொபைல் துறை: 3,50,000 பேர் பணி இழக்க வாய்ப்பு

ஆட்டோ மொபைல் துறையின் சரிவின் காரணமாக இந்த துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பை பெற்றவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடும் சரிவை எதிர்கொள்ளும் ஆட்டோ மொபைல் துறை: 3,50,000 பேர் பணி இழக்க வாய்ப்பு

ஆட்டோ மொபைல் துறையில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை சரிவினால் பல நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.

தொடர்ச்சியான பணி இழப்பு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மட்டுமே சரியாக அடையாளம் கண்டு அது குறித்த செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. தொழிற்துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த மூத்த தொழிற்துறை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இது குறித்த ராய்ட்டர்ஸிடம் பேசியுள்ளனர். 

ஏப்ரல் மாதம் முதல் வாகன உற்பத்தியாளர்கள், உதிரிபாகங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என 3,50,000 தொழிலாளர்கள் பணீநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

பதிவு செய்யப்படாத அறிக்கையின் படி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் 15,000 மற்றும் உதிரி பாகம் உற்பத்தியாளர்கள் 1,00,000 பேர் பணியிழந்துள்ளனர். மீதமுள்ள பணி இழப்பு விற்பனையாளர்கள் பணி இழந்துள்ளதாக தொழில் வட்டாரம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் பணி நீக்கம் செய்த 5 நிறுவனங்களை ராய்ட்டர்ஸ் அடையாளம் கண்டுள்ளது. 

தொழில்துறையில் சரிவு மிக மோசமான பாதிப்பினை கொடுக்கத் தொடங்கியுள்ளது. இது நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக உள்ளது. 
ஆட்டோ மொபைல் துறையின் சரிவை நீக்க நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பில் வரி குறைப்பு, விநியோகஸ்தர் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் எளிதாக கிடைக்கவேண்டிய நிதியுதவியையும் கோரியுள்ளனர். தொழில்துறையினர் ஆட்டோ மொபைல் துறை கடுமையான மந்த நிலைக் கட்டத்தை அனுபவித்து வருவதாக கூறினார்கள்.

தீவிரமாக பரவும் மந்த நிலை

வாகன வகை மற்றும் அந்தந்த நாட்டின் புவியியக் கூறுகளுக்கு ஏற்ப செயல்படும் உற்பத்தி மையங்களிலும் மந்த நிலை வெகுவாக பரவி வருகிறது. ஜப்பானிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான யமஹா மோட்டார் மற்றும் ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களான ஃபிரான்ஸ் வாலோ மற்றும் சுபோரஸ் ஆகிய நிறுவனங்களில் 1,700 தற்காலிக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஜப்பானின் டென்சோ கார்ப் மற்றும் சுசுகி மோட்டோ கார்ப் நிறுவனத்தில் 800 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் வீ ஜி காசுகிகோ 500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த மாதம் யமஹா மற்றும் வால்யோ 200 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
ஹோண்டா மோட்டார், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திர & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்து பணி நீக்கத்திற்கான திட்டத்தை வகுக்கத் தொடங்கியுள்ளது. 

மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப வால்யோ நிறுவனம் தற்காலிக பணியாளர்களைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.


பெரும் வீழ்ச்சி
 ஆட்டோ மொபைல் துறையின் சரிவின் காரணமாக இந்த துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பை பெற்றவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேலைவாய்ப்பின்மை விகிதம் 2019 ஜூலை மாதத்தில் 7.51 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் கடந்த ஆண்டு 5.66 சதவீதமாக இருந்தது என்று தனியார் தரவுக் குழுமம் சி.எம்,ஐ.இ தெரிவித்துள்ளது. 

சி.எம்.ஐ.இ தரவுகள் அரசாங்க புள்ளி விவரங்களை விட புதுப்பித்த நிலையில் உள்ளது மேலும் நிதித் சந்தைகளில் மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது. 15 வாகன உற்பத்தியாளர்களில் பணி புரியும் தற்காலிக தொழிலாளர்களில் குறைந்தது 7 சதவீதம் பேர் சமீபத்திய மாதங்களில் வேலையை இழந்து விட்டதாக சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இயக்குனர் விஷ்ணு மாத்தூர் தெரிவித்தார்.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கடந்த 6 மாதங்களில் தனது தற்காலிக பணியாளர்களை 6 சதவீதம் குறைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ்  தெரிவித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை புத்துயிர் பெறுவதற்கான சிறிய அறிகுறி இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது. 

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 4 தொழிற்சாலைகளில் வாரம் முழுவதும் பணி நிறுத்தம் செய்துள்ளது. சிலவகை கார்களின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. 
 

.