Profit

Income Tax: தனிநபர் வருமான வரி விகிதங்களில் முக்கிய மாற்றம்! வரி வாரியக் குழு பரிந்துரை!

வருமான வரி வாரியக் குழுவினரின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வருடத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியது இருக்கும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Income Tax: தனிநபர் வருமான வரி விகிதங்களில் முக்கிய மாற்றம்! வரி வாரியக் குழு பரிந்துரை!

ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை பெறுபவர்களுக்கு தனிநபர் வருமான வரியை 20 சதவீதமாக குறைக்க பரிந்துரை.


New Delhi: 

தனிநபர் வருமான வரி விகிதங்களில் முக்கிய மாற்றங்களை மத்திய நேரடி வரி வாரியக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது உள்ள வருமான வரி சட்டம் சுமார் 58 வருடங்கள் பழமையானதாகும், இந்த வரி சட்டத்தில் புதிய  மாற்றம் காணும் நோக்கத்தில், மத்திய அரசு புதிய நேரடி வரி விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான பரிந்துரையை தயாரிக்க, மத்திய நேரடி வரி வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு தனிநபர் வருமான வரி விகிதங்களிலும் மாற்றம் கோரி பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. 

வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் புதிய நேரடி வரி விதிகள் வரைவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த ஆக.19ம் தேதி அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு ஒப்படைத்துள்ளது. எனினும், இந்த புதிய வரைவு பொதுமக்கள் பார்வைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. 

இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, தனிநபர் வருமான வரி விகிதங்களில் பெரும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வருமான வரி வாரியக் குழுவினரின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வருடத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியது இருக்கும். 

இதேபோல், ஆண்டு வருமானமாக ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை பெறுபவர்களுக்கு தனிநபர் வருமான வரியை 20 சதவீதமாக குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, தனிநபர் வருமான வரி என்பது, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். இதுவே தற்போது அமலில் இருக்கும் நடைமுறையாகும். 

தற்போது, 5%, 20%, 30 சதவீதம் என 3 பிரிவுகளாக இருக்கும் இந்த தனிநபர் வருமான வரி விகிதங்களுக்கு மாறாக, 5%, 10%, 20%, 30%, மற்றும் 35% என 5 பிரிவுகளாக பிரித்து தனிக்குழு பிரிந்துரைத்துள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும், ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வருமானம் பெறுபவர்களக்கு ஏற்கனவே இருக்கும் 30 சதவீதமே தொடரும் என தெரிகிறது. ஆனால், ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு புதிதாக 35 சதவீதம் வருமான வரி விகிதம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. 

இந்த 2019ஆம் ஆண்டிற்கான இடைக்காலை பட்ஜட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தபோது, அதில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை பெறுபவர்களுக்கு விரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top