கொரோனா நெருக்கடியால் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது ஸ்விக்கி நிறுவனம்!

நிர்ணயிக்கப்பட்ட லாபத்தினை அடைய குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயங்கவும், செலவினங்களை கட்டுப்படுத்தவும் ஸ்விக்கி முடிவெடுத்துள்ளது என மஜெட்டி கூறியுள்ளார்.

கொரோனா நெருக்கடியால் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது ஸ்விக்கி நிறுவனம்!

தேசிய அளவில் பொருளாதார மேம்பாட்டிற்கான 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்பு திட்டங்களின் அம்சங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து முடித்த நிலையில், தற்போது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தங்களது ஊழியர்களில் 1,100 பேர் வேலையிலிருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. 

“துர்திஷ்ட வசமான இந்த ஆட்குறைப்பு பணியினை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். ஸ்விக்கிக்கு இன்று மிகவும் சோகமான நாட்களில் ஒன்று“ என தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். சோமாடோ நிறுவனம் தனது ஊழியர்களில் 13 சதவீதத்தினரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்ததையடுத்து ஸ்விக்கி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கொரோன தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் சில கிளைகளை மூடிவிடவும் இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அடுத்து வரும் 18 மாதங்களில் நிலைமை சீரடைய வாய்ப்பு குறைவு என தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட லாபத்தினை அடைய குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயங்கவும், செலவினங்களை கட்டுப்படுத்தவும் ஸ்விக்கி முடிவெடுத்துள்ளது என மஜெட்டி கூறியுள்ளார். 

Newsbeep

தற்போது உள்ள நெருக்கடியினால் டெலிவரி வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எப்போது சீரடையும் என தெரியாது என இந்நிறுவன தலைமை அதிகாரி ஊழியர்களுடனான கருத்து பரிமாற்றத்தின் போது தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 96 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில் முழு முடக்க நடவடிக்கை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க ஏற்கெனவே பாதித்திருந்த பொருளாதாரம் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மேலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.