காஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு!

எல்பிஜி என்று கூறப்படும் சமைப்பதற்கு பயன்படும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது

காஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு!

ஹைலைட்ஸ்

  • வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ஏறக்குறைய 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது
  • மானியம் இல்லாமல் கொடுக்கப்படும் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்வு
  • இந்த விலை ஏற்றம் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்
எல்பிஜி என்று கூறப்படும் சமைப்பதற்கு பயன்படும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. 

மானியத்துடன் கொடுக்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ஏறக்குறைய 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மானியம் இல்லாமல் கொடுக்கப்படும் சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சிலிண்டரின் எடை அளவு 14.2 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

மானியத்துடன் கொடுக்கப்படும் வீட்டு உபயோக எல்பிஜி, கொல்கத்தாவில் 496.65 ரூபாயாகவும், மும்பையில் 491.31 ரூபாயாகவும், சென்னையில் 481.84 ரூபாயாகவும் மற்றும் டெல்லியில் 493.55 ரூபாயாகவும் விலை ஏற்றத்துக்குப் பிறகு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல மானியம் இல்லாத காஸ் சிலிண்டர்களின் விலை, கொல்கத்தாவில் 723.5 ரூபாயாகவும், மும்பையில் 671.5 ரூபாயாகவும், சென்னையில் 712.5 ரூபாயாகவும் மற்றும் டெல்லியில் 698.5 ரூபாயாகவும் விலை ஏற்றத்துக்குப் பிறகு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த விலை ஏற்றம் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சில பைசாக்கள் குறைக்கப்பட்டு உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை நிர்ணயத்தில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும் எரிபொருள்களின் விலையும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 
Listen to the latest songs, only on JioSaavn.com