சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது!

நிஃப்டியில் இந்தியபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ், பாரத் பெட்ரோலியம், கெயில், யெஸ் பேங்க், மற்றும் ஒஎன்ஜிசி ஆகியவற்றின் வர்த்தகம் உயர்ந்தது. 

சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது!

இந்தியப் பங்குச் சந்தை இன்று நேர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 256 புள்ளிகள் அதிகரித்து 35,608 புள்ளிகளி உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 78 புள்ளிகள் அதிகரித்து 10,682 புள்ளிகளில் உள்ளது. வங்கி, எனர்ஜி, மற்றும் மெட்டல் பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ளன. காலை 9:23 மணியளவில் சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயர்ந்து 25,605 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 10,669 புள்ளிகளில் உள்ளது. 

நிஃப்டியில் இந்தியபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னாஸ், பாரத் பெட்ரோலியம், கெயில், யெஸ் பேங்க், மற்றும் ஒஎன்ஜிசி ஆகியவற்றின் வர்த்தகம் 1.5 சதவீதம் 2.6 சதவீதமும் உயர்ந்தது. 

அமெரிக்க -சீன வர்த்தக பேச்சுவார்த்தைக்குப் பின் ஆசிய பங்குச்சந்தை ஆதாயத்தை அடைந்துள்ளது. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் 0.2சதவீதம் உயர்ந்துள்ளது. ஜப்பானின் நிக்கேய் 0.4 சதவீதம் ஆதாயம் அடைந்துள்ளது.

Newsbeep

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் பேச்சுவார்த்தை நன்றாக நடக்கிறது. மார்ச் 1 மேஜிக்கல் டேட்டாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.