Profit

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது; நிஃப்டி 11,700 புள்ளிகளை கடந்தது

காலை 9:21 மணியளவில் சென்செக்ஸ் 108.31 புள்ளிகள் அதிகரித்து 38,970.54 புள்ளிகளில் இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 19.85 புள்ளிகள் அதிகரித்து 11,685.80 புள்ளிகளில் உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது; நிஃப்டி 11,700 புள்ளிகளை கடந்தது

நிஃப்டியில் ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், வேதாந்தா, ஜீ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், பவர் க்ரீட்,ஆகியவை ஆதாயத்தை எட்டியுள்ளன


உள்நாட்டு பங்குச் சந்தைகள் வாரத்தின்  துவக்கநாளான இன்று மும்பை பங்குச் சந்தை  சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. சென்செக்ஸ் 179.02 புள்ளிகள் அல்லது 0.46 சதவீதம் அதிகரித்து  39,041.25 புள்ளிகளில் உள்ளது.  தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 44.35 புள்ளிகள் அதிகரித்து11,710.30 புள்ளிகளில் உள்ளது. மெட்டல், பார்மா, மீடியா பங்குகள் சந்தை ஆதாயம் அடைய ஆதாரித்துள்ளது.

எனர்ஜி பங்குகள் பலவீனத்தை எதிர்கொண்டு வருகின்ற்ன. காலை 9:21 மணியளவில் சென்செக்ஸ் 108.31 புள்ளிகள் அதிகரித்து 38,970.54 புள்ளிகளில் இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 19.85 புள்ளிகள் அதிகரித்து 11,685.80 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டியில் ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், வேதாந்தா, ஜீ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், பவர் க்ரீட், ஆகியவற்றின் ஆதாயம்/நஷ்டம் 1.11 சதவீதம் முதல் 1.51 சதவீதம் வரை இருந்தது. 

அமெரிக்க ஆலைகளிலும் சீனாவின் ஊக்கத் தொகை குறிப்பிலும் முதலீட்டாளர்கள் மீண்டும் எழுச்சி அடைந்ததால் மற்ற ஆசிய சந்தைகள் ஏழு மாதங்களில் உயர்ந்துள்ளன.  ஆசிய பசிபிக் பங்குகளை எம் எஸ்சிஐயின் பரந்த அளவிலான குறியீடு ஜப்பானுக்கு வெளியில் 0.4% சதவீதம் அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top