சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நிஃப்டியில் பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், டைட்டன், பஜாஜ், ஃபினான்ஸ் மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் 1.6 சதவீதம் மற்றும் 3 சதவீதமும் உயர்ந்தது. 

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 183 புள்ளிகள் அதிகரித்து 35, 682 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 49 புள்ளிகள் அதிகரித்து 10,690 புள்ளிகளில் உள்ளது. 

1. செவ்வாய் கிழமை 9:46 மணிக்கு சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து 35,634 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 10,682 புள்ளிகளில் இருந்தது. 

2. நிஃப்டியில் பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், டைட்டன், பஜாஜ், ஃபினான்ஸ் மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் 1.6 சதவீதம் மற்றும் 3 சதவீதமும் உயர்ந்தது. 

3. நிஃப்டி வங்கி மற்றும் வங்கிசார் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 0.7 சதவீதமும் மும்பை பங்குச் சந்தை 0.8 சதவீதமும் உயர்ந்தது. 

4. முன்னணி வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி பேங்க் ஆஃப் பரோடா, ஆகியவற்றின் காலை வர்த்தகம் 1-2 சதவிகிதம் உயர்ந்தது. நிஃப்டியின் ஐடி பங்குகள் இன்போசிஸ் தலைமையில்  1 சதவிகிதம் குறைந்துள்ளது.

5. திங்களன்று இந்திய ரிசர்வ் வங்கி அதன் லாபத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்திறு வழங்குவதற்கு ஒப்புக் கொண்டது. இது மே மாத தேர்தல்களுக்கு முன்னதாக நிதியளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

6. இந்தியப் பங்குச் சந்தை ஆசிய பங்குச் சந்தையின் சாதகமான குறிப்புகளை மட்டும் எடுத்துள்ளது. ஜப்பானுக்கு வெளியே ஆசிய -பசிபிக் பங்குகளின் MSCI குறியீடு உறுதியாக உள்ளது.

7. ஜப்பானின் நிக்கேய் கிட்டத்தட்ட தட்டையாக உள்ளது. சீனாவின் ப்ளூ சிப் இண்டெக்ஸ் 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

8. அமெரிக்க சீன வர்த்தக பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆசிய பங்குச் சந்தை ஊக்குவித்துள்ளது.