Profit

சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன 28-2-19

பார்மா, எஃப் எம்சிஜி மற்றும் எனர்ஜி பங்குகளின் முன்னேற்றங்கள் சந்தையை ஆதரித்தன. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன 28-2-19

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 59.05 புள்ளிகள் அதிகரித்து 10,865.70 புள்ளிகளில் உள்ளது


இன்று இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 180.42 புள்ளிகள் அதிகரித்து 36,085.85 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 59.05 புள்ளிகள் அதிகரித்து 10,865.70 புள்ளிகளில் உள்ளது. பார்மா, எஃப் எம்சிஜி மற்றும் எனர்ஜி பங்குகளின் முன்னேற்றங்கள் சந்தையை ஆதரித்தன. 

காலை 9:26 மணியளவில் சென்செக்ஸ் 150.89 புள்ளிகள் அதிகரித்து 36,056.32 புள்ளிகளில் இருந்தன. நிஃப்டி 38.30 புள்ளிகள் அதிகரித்து 10,844.95 புள்ளிகளில் இருந்தன. இந்தியன் ஆயில், பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி மற்றும் கோல் இந்தியாஆகியவற்றின் வர்த்தகம் 1.31 சதவீதம் முதல் 1.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களே நிஃப்டியில் ஆதாயம் பெற்றதில் முன்னிலையில் உள்ளவையாகும். 

ஆய்வாளர்கள் முக்கிய பொருளாதார தரவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 2018 ஆம் ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தரவுகளை வெளியிடவுள்ளது.

 ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 55 பொருளாதார வல்லுநர்களிடமிருந்து வந்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தரவுகள் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையான காலண்டில்  6.9 சதவீதமாக இருந்ததென தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான உள் கட்டமைப்பு உற்பத்தி தரவு இதே நாளில் வெளியிடப்படவுள்ளது. 

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லிட்ட்தைர் எச்சரிக்கை விடுத்த பின் ஆசிய சந்தைகள் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அமெரிக்க சீனாவுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் சில சாதகமான நம்பிக்கைகள் குறைந்துவிட்டன. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் சரிவை சந்தித்தன. கொரியாவின் கொசிபிஐ 0.25 சதவீதத்தையும் ஜப்பானின் நிக்கேய் 0.35 சதவீதமும் சரிந்தன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top