சென்செக்ஸ், நிஃப்டி குறுகிய உயர்வை எட்டியுள்ளன 21-2-19

நிஃப்டியில் 28 நிறுவனங்களின் பங்குகள் ஆதாயத்தை பெற்றன. ஐசிஐசிஐஇ வங்கி, கிரசிம், கெயில், அல்ட்ரா டெக் சிமிண்ட்,  ஓஎன்ஜிசி, வேதாந்தா     வர்த்தகம் 1.3 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதத்தில் உள்ளது. 

அமெரிக்கா- சீன வர்த்தக பேச்சுவார்த்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

இந்தியப் பங்குச் சந்தை இன்று சற்று உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  95 புள்ளிகள் அதிகரித்து 35,851 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 10,756 புள்ளிகளில் உள்ளது.

காலை 9:43 மணியளவில் சென்செக்ஸ் 31 புள்ளிகள் அதிகரித்து 35,787 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 10,739 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டியில் 28 நிறுவனங்களின் பங்குகள் ஆதாயத்தை பெற்றன. ஐசிஐசிஐஇ வங்கி, கிரசிம், கெயில், அல்ட்ரா டெக் சிமிண்ட்,  ஓஎன்ஜிசி, வேதாந்தா வர்த்தகம் 1.3 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதத்தில் உள்ளது. 

ஆசிய பங்குகள் கடந்த 4 மாதத்திற்கு மேல்  உறுதியாக உள்ளது. அமெரிக்கா- சீன வர்த்தக பேச்சுவார்த்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது. 

Newsbeep

ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் சற்று உயர்ந்துள்ளது. ஜப்பானின் நிக்கேய் 0.3 சதவீதம் குறைந்தது.