Profit

சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன... தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

ஆட்டோ, பார்மா மற்றும் எனர்ஜி பங்குகள் இன்று பலவீனமடைந்தன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன... தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 71.22 ஆக உயர்ந்தது. 


ஹைலைட்ஸ்

  1. ஆட்டோ, பார்மா மற்றும் எனர்ஜி பங்குகள் இன்று பலவீனமடைந்தன.
  2. நிஃப்டியில் உள்ள ஆட்டோமொபைல் பங்குகள் 1.7 சதவீதம் குறைந்தது.
  3. ஜனவரி மாத நுகர்வோர் பணவீக்கத் தரவை செவ்வாய்கிழமை வெளியிட அரசு வெளியிடும்

இந்தியப் பங்குச் சந்தை வர்த்தக வாரத்தின் தொடக்க நாளான இன்று பலவீனமாகவே தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை  சென்செக்ஸ் 237 புள்ளிகள் குறைந்து 36,309 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 86 புள்ளிகள் குறைந்து 10,857 புள்ளிகளில் உள்ளது. ஆட்டோ, பார்மா மற்றும் எனர்ஜி பங்குகள் இன்று பலவீனமடைந்தன.

1. காலை 9.56 மணியளவில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிந்திருந்தன. நிஃப்டி 77 புள்ளிகள் சரிந்திருந்தன.

2. நிஃப்டியில் ஒஎன்ஜிசி, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ், மகேந்திரா & மகேந்திரா, டாக்டர் ரெட்டி லெபரெட்ரிஸ் மற்றும் கெய்ல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் நிஃப்டியில் நஷ்டத்தை எதிர்கொண்டன.  வர்த்தகம் 3.9 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைந்தது.  

3. நிஃப்டியில் உள்ள ஆட்டோமொபைல் பங்குகள் 1.7 சதவீதம் குறைந்தது. இந்த துறையில் நஷ்டத்தை எதிர்கொண்ட முக்கிய நிறுவனங்கள் மோட்டார்ஸ் அசோக் லேலண்ட்,ஹீரோ, மோட்டோகார்ப் ஆகியவை 4.6 சதவீதம் குறைந்தன. 

4. ஜனவரி மாத நுகர்வோர் பணவீக்கத் தரவை செவ்வாய்கிழமை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. தொழில்துறை உற்பத்தி தரவு அதே நாளில் வெளியிடப்படும். மொத்த விற்பனையின்  பணவீக்க தரவு வியாழன் அன்று வெளியிடப்படும். 

5. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி கூட்டத்திற்கு முன்னதாக 30 பொருளாதார வல்லுநர்களின் கருத்துகளை ராய்ட்டர்ஸ் வெளியிட்டது. அதன்படி, நுகர்வோர் விலை பணவீக்கம் ஜனவரியில் 2.48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த கருத்து உண்மையென்றால், ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்குக்கும் குறைவாக இருக்கும் ஆறாவது மாதமாக ஜனவரி இருக்கும். 

6. மற்றொரு புறம் ஐடி பங்குகள் சந்தைக்கு உதவியுள்ளது. நிஃப்டியில் 0.7 சதவீதம் உயர்ந்தது. ஆசிய பங்குச் சந்தைகள் பங்குகள் உலக வளர்ச்சி மற்றும் அமெரிக்க -சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரினால் சரிந்துள்ளது. 

7. சீன பங்குகள் ஏற்ற இறக்கமாகவே உள்ளது. புளூ சிப் இண்டெக்ஸில் 0.4 சதவீதம் குறைந்துள்ளது. 

8. ஆஸ்திரேலியா பங்குகள் 0.6 சதவீதம் குறைந்தது. தென்கொரியா 0.2 சதவீதம் சரிந்தது.  ஜப்பான் இல்லாத ஆசிய-பசிபிக் பங்குகள் 0.1 சதவீதம் குறைந்தது. 

9. முதலீட்டாளர்கள் அடுத்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு நடத்தப்போகும் பேச்சுவார்த்தையை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். 

10. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 71.22 ஆக உயர்ந்தது. 

வர்த்தகநாளின்முடிவில்  சென்செக்ஸ் 151 புள்ளிகள்சரிந்து 36,395 புள்ளிகளில்முடிவடைந்துள்ளது. நிஃப்டி 55 புள்ளிகள்சரிந்து 10,889 புள்ளிகளில்முடிவடைந்துள்ளது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top