நெருக்கடியில் அனில் அம்பானி; ரூ.1200 கோடி கடனை வசூலிக்க வழக்கு தொடுத்த எஸ்பிஐ!

எஸ்பிஐ வங்கி திவால் சட்டத்தின் தனிப்பட்ட உத்தரவாத பிரிவின் கீழ் ரூ.1,200 கோடியை மீட்க முயற்சித்து வருவதாக படிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

நெருக்கடியில் அனில் அம்பானி; ரூ.1200 கோடி கடனை வசூலிக்க வழக்கு தொடுத்த எஸ்பிஐ!

நெருக்கடியில் அனில் அம்பானி; ரூ.1200 கோடி கடனை வசூலிக்க வழக்கு தொடுத்த எஸ்பிஐ!

முன்னாள் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தனிப்பட்ட உத்தரவாதங்களில் வழங்கப்பட்ட கடன்களை மீட்டெடுக்க எஸ்பிஐ வங்கி முயற்சித்து வருகிறது. அதன் மதிப்பு சுமார் ரூ.1200 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக நீதிமன்றத்தின் வலைதளத்தில் உள்ள தகவலின் படி, தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் அனில் அம்பானிக்கு எஸ்பிஐ கொடுத்திருக்கும் கடன்களை, அவரிடம் இருந்து வசூலித்து தருமாறு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் லிமிடெட் நிறுவனங்களின் கடன் தொடர்பாக அனில் அம்பானி பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது.

அனில் அம்பானி, ஆசியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் ஆவார். முகேஷ் அம்பானி கடந்த காலங்களில் தனது சகோதரர் சிக்கலில் இருந்த போது உதவியுள்ளார். அப்போது, அனில் அம்பானி சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு வழக்கில் கடைசி நிமிடத்தில் அவருக்கு பண உதவி அளித்தார். 

Newsbeep

எஸ்பிஐ வங்கி திவால் சட்டத்தின் தனிப்பட்ட உத்தரவாத பிரிவின் கீழ் ரூ.1,200 கோடியை மீட்க முயற்சித்து வருவதாக படிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்" நிறுவனத்தால் பெறப்பட்ட ஒரு பெருநிறுவன கடனுடன் தொடர்புடையது, இது அனில் அம்பானியின் தனிப்பட்ட கடன் அல்ல என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்காக தீர்ப்பாயத்திற்கு தக்க பதில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.