வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது எஸ்.பி.ஐ!

எஸ்.பி.ஐ வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளதால், மற்ற போட்டி வங்கிகளும் வட்டி விகித மாற்றத்தை மேற்கொள்ளும் என்று யூகிக்கப்படுகிறது.

வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது எஸ்.பி.ஐ!

பல வைப்பு நிதிகளுக்கு வட்டி விகித மாற்றத்தே மேற்கொண்டுள்ளது எஸ்.பி.ஐ

ஹைலைட்ஸ்

  • பல வைப்பு நிதி வட்டி வதிகதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • மற்ற வங்கிகளும் வைப்பு நிதி வட்டியில் மாற்றம் செய்யலாம்
  • இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி எஸ்.பி.ஐ

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ), வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது. சில வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ள எஸ்.பி.ஐ, மீதமுள்ளதற்கு எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த வைப்பு நிதி வட்டி விகித மாற்றம், மே 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ தெரிவித்து உள்ளது. 

ஒரு ஆண்டுக்கு மேலும் இரண்டு ஆண்டுக்கு உள்ளும் மெச்சூரிட்டி காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 6.4 சதவிகிதமே வட்டி இருந்தது. தற்போது, அது 6.65 சதவிகிதமாக மாற்றப்பட்டு உள்ளது. இதுவே, மூத்த குடிமக்களுக்கு 6.9 சதவிகிதத்தில் இருந்து 7.15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல, இரண்டு வருடத்துக்கு மேலாகவும் மூன்று ஆண்டுக்கு உள்ளாகவும் முதிர்வு காலம் இருக்கும் வைப்பு நிதிக்கு 6.6 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 6.65 சதவிகிதத்துக்கு உயர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ. மூத்த குடிமக்களுக்கு இது 7.1 சதவிகிதத்தில் இருந்து 7.15 சதவிகிதமாக மாற்றப்பட்டு உள்ளது.

ஆனால், மற்ற முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி கணக்குகளுக்கு வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை பாரத ஸ்டேட் வங்கி. 

TenorsExisting for Public w.e.f. 28.03.2018Revised For Public w.e.f. 28.05.2018Existing for Senior Citizens w.e.f. 28.03.2018Revised for Senior Citizens w.e.f. 28.05.2018
7 days to 45 days5.755.756.256.25
46 days to 179 days6.256.256.756.75
180 days to 210 days6.356.356.856.85
211 days to less than 1 year6.46.46.96.9
1 year to less than 2 year6.46.656.97.15
2 years to less than 3 years6.66.657.17.15
3 years to less than 5 years6.76.77.27.2
5 years and up to 10 years6.756.757.257.25
(Source: sbi.co.in)

(SBI fixed deposit interest rate across different maturities)

எஸ்.பி.ஐ வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளதால், மற்ற போட்டி வங்கிகளும் வட்டி விகித மாற்றத்தை மேற்கொள்ளும் என்று யூகிக்கப்படுகிறது.

Newsbeep