சுற்றுலா செல்ல திட்டமா? ஸ்டேட் பேங்கின் இந்த திட்டம் உங்களுக்கு உதவும்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஸ்டேட் பேங்கின் ஹாலிடே இ - ரெகரிங் டெபாசிட்

சுற்றுலா செல்ல திட்டமா? ஸ்டேட் பேங்கின் இந்த திட்டம் உங்களுக்கு உதவும்

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது உங்கள் நீண்ட நாள் திட்டமா? உங்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஸ்டேட் பேங்கின் ஹாலிடே இ - ரெகரிங் டெபாசிட். சுற்றுலா மற்றும் பயண உதவி நிறுவனமான தாமஸ் குக்குடன் இணைந்து, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்.பி.ஐ. இத்திட்டத்தின் படி, சிறப்பு வட்டி விகதங்களுடன் கூடிய ஆன்லைன் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு தொடங்கப்படும். இதில் கிடைக்கும் வட்டித் தொகை அனைத்தும் உங்கள் விடுமுறை சுற்றுலாவுக்கான செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் எப்படி இணைவது:

தாமஸ் குக் நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு சென்று, உங்களுக்கு ஏற்ற சுற்றுலா பேக்கேஜை தேர்வு செய்யுங்கள் நீங்கள் தேர்வு செய்யும் பேக்கேஜின் கட்டணம், 13 பாகங்களாக பிரிக்கப்படும். பின் ஸ்டேட் பேங்க் இணையதளத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு 12 மாதங்களுக்கான இ - ரெகரிங் டெபாசிட்கணக்கை தொடங்க வேண்டும்.

தற்போது இ - ரெக்கரிங் டெபாசிட்டில் கொடுக்கப்படும் வட்டி விகதங்கள் தான் 12 மாதத்துக்கு கொடுக்கபப்டும். 12 மாத முடிவில் உங்கள் பணம், தாமஸ் குக் நிறுவனத்துக்கு மாற்றப்படும்.

மீதம் உள்ள 13 வது பாகத்துக்கான பணத்தை தாமஸ் குக் நிறுவனம் உங்களுக்காக செலுத்தும்.

ஸ்டேட் பேங்கின் ஃபிக்ஸட் டெபாசிட் போலவே, ஹாலிடே ரெக்கரிங் டெபாசிட்டுக்கும் 6.65% வட்டி விகதம் தரப்படுகிறது.

எஸ்.பி.ஐ ஹாலிடே இ - ஆர்.டி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்

  • 12 மாதங்கள் ஆர்.டி நீடிக்கும். வாடிக்கையாளர் தேர்வு செய்த பேக்கேஜை பொருத்து, அதற்கான தொகையை தாமஸ் குக் நிறுவனம் தான் முடிவு செய்யும்.
  • 12 மாதங்களுக்கு முன்பாகவே இந்த கணக்கை வாடிக்கையாளர் மூட விரும்பினால், ஆர்.டிக்கு பணம் செலுத்திய வங்கிக் கணக்குக்கு அந்த தொகை அனுப்பப்படும்.
  • 12 மாதங்களுக்கு முன் கணக்கு மூட வேண்டுமெனில் அதற்கான அபராதக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மாதத் தவணைத் தொகை, தாமதமாக செலுத்தப்பட்டால் 100 ரூபாய்க்கு 1.5 ரூபாய் என்ற கணக்கில் அபராதம் வசூலிக்கப்படும்.
  • 12 மாதங்கள் முடிந்த மெச்சூரிட்டியின் போது, ஆர்.டியில் உள்ள தொகை தாமஸ் குக் நிறுவனத்துக்கு அனுப்பபடும். வாடிக்கையாளர் விரும்பினால், அந்த தொகைய தங்களது சேமிப்பு கணக்குக்கும் மாற்றிக் கொள்ளலாம்.
  • இந்த ஆர்.டி டெபாசிட் தொகையில் இருந்து டி.டி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும். எனவே 12 மாதங்கள் முடிவில் தாமஸ் குக் நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையில் குறைவு ஏற்படும். எனவே, மீதம் உள்ளத் தொகையை வாடிக்கையாளர் தாமஸ் குக் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும்.
More News