This Article is From Nov 13, 2018

பண்டிகை காலத்தில் ரயில்வேயின் வருவாய் 51% ஆக உயர்வு!

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகள் முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரெயில்வே சிறப்பு இரயில்களை இயக்குகிறது.

பண்டிகை காலத்தில் ரயில்வேயின் வருவாய் 51% ஆக உயர்வு!
Chennai:

இந்த வருட தீபாவளியின் போது ரூ. 2.72 கோடியாக தெற்கு ரயில்வே வருவாய் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் தெற்கு ரயில்வேயின் வருவாய் ரூ1.80 கோடி. 

சென்னையிலிருந்து இருபது சுவிதா ரயில்கள் மற்றும் 16 சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஹவுராவிற்கும் சென்றதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் 2.21 லட்சம் பயணிகளும், இந்த வருடம் 100 சதவீதம் அதாவது, 2.70 லட்சம் பயணிகளும் ரயில்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களை இயக்குகிறது. 

.