Profit

சென்செக்ஸ் 100புள்ளிகள் அதிகரித்தன 7-3-19

நிஃப்டியில் பவர் க்ரீட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பார்தி இன்ஃப்ராடெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் மற்றும் கெயில் ஆகியவற்றின் வர்த்தகம் 0.85 சதவீதம் முதல் 1.71 சதவீதம் வர்த்தகம் உயர்ந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 100புள்ளிகள் அதிகரித்தன 7-3-19

இந்தியப் பங்குச் சந்தை இன்று நேர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 113.2 புள்ளிகள் அதிகரித்து 36,749.30 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 24.95 புள்ளிகள் அதிகரித்து 11,077.95 புள்ளிகளில் உள்ளது. நுகர்வோர் பொருட்கள் மற்றும் எனர்ஜி பங்குகள் ஏற்றம் கண்டன. மெட்டல் மற்றும் ஆட்டோ பங்குகள் பலவீனமடைந்தன. 

காலை 9:29 மணியளவில் சென்செக்ஸ் 78.23 புள்ளிகள் உயர்ந்து 36,714.33 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டி 6 புள்ளிகள் அதிகரித்து 11,059.00 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டியில் பவர் க்ரீட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பார்தி இன்ஃப்ராடெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் மற்றும் கெயில் ஆகியவற்றின் வர்த்தகம் 0.85 சதவீதம் முதல் 1.71 சதவீதம் வர்த்தகம் உயர்ந்துள்ளது.

சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த முன்னெச்சரிக்கை ஆசிய பங்குச் சந்தையில் ஏற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜப்பானின் நிக்கேய் சராசரியாக 0.6 சதவீதம், ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top