This Article is From Mar 27, 2019

சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது: வங்கியின் பங்குகள் உயர்ந்துள்ளன

இண்டஸ் இண்ட் பேங்க் நிஃப்டியில் ஆதாயத்தை பெற்றதில் முன்னணியில் உள்ளது. இதன் பங்குகள் 3.81 சதவீதம் உயர்ந்து ரூ. 1,780 ஆக உள்ளது.

சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது: வங்கியின் பங்குகள் உயர்ந்துள்ளன

இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்ந்துள்ளது. வங்கிப் பங்குகள் ஆதாயத்தை அடைந்துள்ள்ன. எச் டிஎஃப்சி  பேங்க், யெஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் ஆதாயத்தை அடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 223 புள்ளிகள் அல்லது 0.58 சதவீதம் அதிகரித்து 38,456.86 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி  55 புள்ளிகள் அல்லது 0.48 சதவீதம் அதிகரித்து 11,538 புள்ளிகளில் உள்ளது.

காலை 9:26 மணியளவில் சென்செக்ஸ் 0.54 சதவீதம் அதிகரித்து 206 புள்ளிகள் உயர்ந்து 38,439 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 0.39 சதவீதம் அல்லது 45 புள்ளிகள் அதிகரித்து 11,528 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டியில் பிஎஸ்யூ வங்கி பங்குகள் 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரைவேட் பேங்க், பார்மா மீடியா, எஃப் எம்சிஜி மற்றும் பேங்க் இண்டெக்ஸ் ஆகியவை உயர்ந்துள்ளது. 0.5 சதவீதம் 0.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் 0.67 பங்குகள் அதிகரித்துள்ளன.

இண்டஸ் இண்ட் பேங்க் நிஃப்டியில் ஆதாயத்தை பெற்றதில் முன்னணியில் உள்ளது. இதன் பங்குகள் 3.81 சதவீதம் உயர்ந்து ரூ. 1,780 ஆக உள்ளது. இந்தியா புல்ஸ் ஹவுசிங்க் ஃபைன்னாஸ், யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், டாக்டர் ரெட்டி லேப்ஸ், லார்சார்& டூப்ரோஆகியவை ஆதாயத்தை அடைந்தன. மற்றொரு புறம் ஹிந்துஸ்தான் பெட் ரோலியம், பாரத் பெட் ரோலியம். டெக் மஹிந்திரா, ஓஎன் ஜிசி, எண்டிபிசி, பவர் கிரிட் ஆகியவை தடுமாறி வருகின்றன.

.